CSS Website Layout

Smiley face








S.No Points

1.

முகப்பு கடிதம்

2.

மத்தியகால கடன் விண்ணப்பம் பரிந்துரை சான்று

3.

. மத்தியகாலக் கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று

4.

தாட்கோ கடன் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி கடிதம்

5.

இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்து பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும்.

6.

பிற வணிக வங்கிகள் நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும்.

7.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளைமேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும்.

8.

நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டு தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும்

9.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமானசான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கப்படவேண்டும்.

10.

உறுப்பினர்களுக்கு விண்ணப்பபடிவம் முழுமையாக பூர்த்தி செய்து தனித்தனியாக இணைக்கப்படவேண்டும். ரூ25,000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25000/- க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும்.

11.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும்.

12.

இதற்கு முன் வழங்கப்பட்டுள்ள மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் செய்ய வேண்டும் ( முதல் கடன் எனில் இச்சான்று தேவை இல்லை)

13.

கால்நடை மருத்துவரின் திட்ட அறிக்கை மற்றும் விலைப்புள்ளி

14.

விண்ணப்பதாரர் இதே காரியத்திற்காக பால் விநியோக சங்கங்களிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ கடன் பெறவில்லை என்பதற்கு விண்ணப்பதாரரிடம் சான்று பெற்று இணைக்கவேண்டும்

15.

கடன் முழுவதும் தீரும் முன்னர் கடன் தாரர்கள் கறவை மாடுகளை விற்கவோ அல்லது வேறு மாற்றம் செய்யவோ மாட்டோம் என உறுப்பினரிடம் உறுதிமொழி பெற்று இணைக்கவேண்டும்.

16.

ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கிளை மேலாளர் கடன் தாரரிடமுள்ள பால்பண்ணையை நேரடியாக பரிசீலனை செய்யவேண்டும்.

17.

பால்பண்ணை அமைக்க வாங்கப்படும் கறவைமாடுகள் கிளை மேலாளர் கால்நடைத்துறை மருத்துவர் களமேலாளர் கூட்டாக கொள்முதல் செய்கிறோம் என்ற உறுதிமொழி இணைக்கப்படவேண்டும்.

18.

சினை மாடுகள் வாங்கப்பட மாட்டாது என விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் மனுவுடன் இணைக்கவேண்டும்.

19.

வாங்கப்படும் கறவை மாடுகள் கொள்முதல் செய்த நாள் முதல் கடன் தீரும் வரை காப்பீடு செய்யப்படும் என கிளை மேலாளர் சான்று சமர்ப்பிக்கவேண்டும்.

20.

விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகைக்கு 10% விளிம்புத்தொகை செலுத்துவேன் என சம்மத கடிதம் பெற்று இணைக்கவேண்டும்

21.

கடன் கோருபவர் குறைந்த பட்சம் 1 ஏக்கர் பச்சை புல் பயிரிடப்பட்டுள்ளது என்று கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும். மேலும் அதற்குரிய நில அடங்கல் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

22.

மாடுகளை வைத்து பராமரிப்பதற்கு தேவையான மாட்டுக்கொட்டகை ( தொழுவம் வசதி) உள்ளது என நேரடியாக பார்வையிடப்பட்ட பின் கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும்,

23.

வாங்கப்படும் மாடுகள் மற்றும் கொட்டகைக்கு விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி பெயரில் கூட்டாக காப்பீடு செய்வேன் என சம்மதக்கடிதம் விண்ணப்பதாரரிடமிருந்து பெற்று இணைக்கப்படவேண்டும்.

24.

கால்நடைக்கு தேவையான மருத்துவ வசதியினை விண்ணப்பதாரர் தனது சொந்த செலவில் மேற்கொள்வேன் என்று உறுதிமொழி கடிதம் இணைக்கப்படவேண்டும்.

25.

உற்பத்தியாகும் பாலை விற்பனை செய்ய விண்ணப்பதாரரே ஏற்பாடு செய்து கொள்வேன் என சம்மத கடிதம் பெற்று இணைக்கப்படவேண்டும்.

26.

கடன் தொகையை மூன்று தவணையாக (30% ,40% & 30%) பொறியாளர் திட்ட அறிக்கையின்படி வழங்கப்படவேண்டும்.மேலும் பொருட்களுக்கான தொகைக்கு ரசீது பெற்று வைக்கவேண்டும்.

27.

முதல் தவணையாக ஐந்து மாடுகள் பெற்ற பயனாளிகள் அசல் மற்றும் வட்டி தொகையை தவணை தவறாமல் இருசால் செய்த பின்னர் இரண்டாவது தவணையாக ஐந்து மாடுகள் ஆறு மாதத்திற்கு பின் பட்டுவாடா செய்யப்படவேண்டும்.

28.

எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்தியக் கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி/ நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்பட வேண்டும்.

29.

கடன் தொகை ரூ.1.00 லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையைப் போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும்.

1. மூலப்பத்திரம்

2. கிரையப்பத்திரம்

3. பட்டா நகல்

4. வில்லங்கச்சான்றிதழ்

5. அடமானம் பெறப்பட்ட உள்ள இடத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு வீடாக இருப்பின் வங்கி பொறியாளர் மதிப்பு அறிக்கை

6. சட்டக்கருத்துரை மத்திய வங்கி வழக்கறிஞரால் வழங்கப்படவேண்டும்.

30.

கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும்.