S.No | Points | Details |
---|---|---|
1. |
தலைப்பு : |
இந்த ஒழுங்குமுறை விதிகள் மகளிர் தொழில் முனைவோர் கடன் அனுமதிப்பதற்கான ஒழுங்குமுறை விதிகள் என அழைக்கப்படும். |
2. |
கடன் வழங்கும் வங்கிகள் : |
மகளிர் வளர்ச்சி கடன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும். |
3. |
நோக்கம்; |
சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள் மற்றும் சேவை மையங்கள் (சிறுவாகன போக்குவரத்துக் கடன் தவிர) துவங்க கடன் உதவி. |
4. |
கடன் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ; |
அ) சிறு வாகனப் போக்குவரத்து தவிர்த்து சிறு தொழில் பிரிவில் அடங்கும் அனைத்து தொழில்கள் மற்றும் சேவைகள் துவங்கும் படித்த வேலையில்லா மகளிர் |
5. |
தொழில் நடத்தும் / துவங்கும் இடம்: |
விண்ணப்பதாரர் அவரது தொழிலை அவருக்கு கடன் வழங்கும் வங்கியின் செயல் எல்லையில் தான் துவங்கவேண்டும்.துவங்க உள்ள தொழிலுக்கு மாவட்ட தொழில் நுட்ப மையத்திடம் தொழில் நுட்ப சான்று பெற வேண்டும். |
6. |
வங்கியில் இணை உறுப்பினராதல் |
கடன் பெறும் உறுப்பினர்கள் அனைவரும் இணை உறுப்பினர்களாக சேர்க்கப்படவேண்டும். இதற்கான கட்டணம் ரூ50/- மட்டும் ஒவ்வொருவரிடம் பெற வேண்டும். |
7. |
வங்கியில் கணக்கு துவங்குதல்: |
விண்ணப்பதாரர் வங்கியில் நடப்பு கணக்கு துவங்கி அவரது வருமானத்தை இக்கனக்கில் இட்டு வைத்து வருவதுடன் அவரது கணக்கில் வங்கி நிர்ணயித்துள்ள அளவிற்கு நிலுவை பராமரித்து வரவேண்டும். |
8. |
துணைப்பிணையம் மற்றும் பிணையதாரர்கள் |
சிறு தொழில் முனைவோர் கடன் பெற்று வாங்கும் இயந்திரங்கள் மற்ற உப பாகங்களை வங்கிக்கு அடமானம் செய்து தரவேண்டும். விண்ணப்பதாரர் கடன் தொகைக்கு சமமான வில்லங்கம் இல்லாத அசையா சொத்தினை துணைப்பிணையமாக கொடுக்க வேண்டும். |
9. |
கடன் அளவு |
ஒரு நபருக்கு திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கலாம். திட்ட மதிப்பீட்டை மத்தியக்கூட்டுறவு வங்கியில் இயங்கும் தொழில் நுட்ப பிரிவு மற்றும் மகளிர் வளர்ச்சி பிரிவு சரிபார்த்து அத்தாட்சி வழங்கவேண்டும். |
10. |
விளிம்புத் தொகை |
விண்ணப்பதாரர் திட்ட மதிப்பீட்டில் 20 விழுக்காடு அளவிற்கு விளிம்புத் தொகை செலுத்த வேண்டும். |
11. |
வட்டி விகிதம் ; |
வட்டி விகிதம் 15% தவணை தவறிய கடனுக்கு 1% அபராத வட்டி வசூலிக்கப்பட வேண்டும். |
12. |
கடனை திருப்பி செலுத்தும் காலம்: |
இக்கடனை 60 மாத சம தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும் |
13. |
கடன் விண்னப்பத்துடன் கொடுக்கப்பட வேண்டிய ஆவனங்கள்: |
1. திட்ட மதிப்பீடு |