CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

கடன் பெறதகுதிகள்:

1. ஒரு குழுவில் 12 முதல் 20 உறுப்பினர்களுக்கு அதிகமாகாமல் இருக்கவேண்டும். இக்குழுக்கள் முறைசாராதவை அதனால் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை.

2. குழுவில் ஆண்குழுக்களாகவும், பெண் குழுக்களாகவும் இருக்க வேண்டும்.

3. குழுவில் ஒருவரை ஊக்குனராகவும், ஒருவரை முதல் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கவேண்டும்.

4. முதல் பிரதிநிதியோ அல்லது ஊக்குநரோ செயல்பட இயலாதநிலையில் இரண்டாம் பிரதிநிதியாக ஒருவர் செயல்படவேண்டும்.

5. சேமிப்புகளை குழுவின் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கு திறந்து செலுத்தி வரவேண்டும்.

6. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை கூடி குழுவின் நடவடிக்கைகளை விவாதிக்கவேண்டும்.

7. கூட்ட நடவடிக்கைகளை தீர்மான புத்தகத்தில் பதிந்து வரவேண்டும்

8. குழு ஆறு மாதங்களு முறையாக நடத்தப்பட்டிருந்தால் அவர்களது சேமிப்பில் ஒன்று முதல் நான் கு மடங்கு வரை வங்கியில் கடன் வழங்கப்படும். முதல்முறையாக கடன் கேட்பவருக்கு ரூ50,000/- மட்டும் வழங்கப்படும்.

9. குழுவின் சேமிப்பையும் வங்கியில் பெறும் கடனையும் சேர்த்து உறுப்பினர்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

10. உட்கடனை பொறுத்தவரையில் கடனின் நோக்கம் மற்றும் திரும்ப செலுத்தும் காலத்தை குழுவே முடிவு செய்யவேண்டும்.

11. உட்கடனுக்கு வசூலிக்க வேண்டிய வட்டியையும் குழுவே முடிவு செய்யவேண்டும்.

12. வழங்கிய கடனை வசூல் செய்யவதற்கு குழு உறுப்பினர்களின் தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாவார்கள்.

13. குழு உறுப்பினர்கள் 18 வயது முழுமையாக பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

2.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் அருகில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று தேவையான ஆவணங்களுடன் கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

3.

கடன் தொகை:

இக்கடன் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
அதிகபட்சம் கடன் தொகை ரூ.10.00 லட்சம் வரை

அ. கடன் மூன்று வருடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஆ. இக்கடன் சேமிப்பு தொகையில் 4 மடங்குகள் வரை அனுமதிக்கப்படுகிறது.

இ. கடன் மாதாந்திர தவணையில் திரும்ப செலுத்தப்படவேண்டும்.

ஈ. அவ்வப்போது வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படவேண்டும்.

4.

வட்டி விகிதம்

வட்டிவிகித அட்டவணையில் உள்ளபடி

5.

கடன் அனுமதிக்கும் அதிகாரம் ;

கிளை மேலாளர் :

6.

தேவையான ஆவணங்கள் :

1. முகப்பு கடிதம்

2. விண்ணப்ப படிவம் (இணைப்பு 1 முதல் 7 வரை)

3. கிளை மேலாளர் சான்று

4. குழு தீர்மானம்

5. இதர வணிக வங்கிகளில் கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்று

6. குழுவால் ஆரம்பிக்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல்

7. குழு ஒட்டு மொத்த புகைப்படம்

8. குழுத் தனித்தனியாக புகைப்படம்

9. குழுக்களு கடன் வழங்கும் போது இவர்களிடம் நிர்ணயித்த ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைதாள் படிவத்தில் உறுதி மொழி பத்திரம் பெற்று கொள்ள வேண்டும்.

10. குழுக்களுக்கு கடன் வழங்கும் முன் மதிப்பீடு பட்டியலில் மகளிர் திட்ட அலுவலரிடம் கையொப்பம் பெற வேண்டும்.

11. குழுக்களுக்கு வழங்கும் கடன் களுக்கான வட்டி அவ்வப்போது தேசிய வங்கி அல்லது மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்ணயிக்கும் விகிதத்தில் இருக்கும்.

12. குழுபேணிவரும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு தேவையானபோது வங்கி அலுவலர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

13. ஒப்பந்த பத்திரங்கள் 1,2,3,4,5,6,7 படிவங்களில் சமர்ப்பிக்கவேண்டும்.

14. கடன் பத்திரம் மற்றும் புரோ நோட்டு வங்கிக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

15. குழுவிலுள்ள அனைவரின் ஸ்மார்ட் கார்டு நகல் அல்லது ஆதார் கார்டு நகல் பெறவேண்டும்.

16. குழுவில் 60 வயது மேற்பட்டோருக்கு கடன் வழங்கவில்லை என்ற தீர்மானம் குழுவால் வழங்கப்பட வேண்டும்.