CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

சிறுபான்மையினர்

தமிழ்நாட்டில் கீழ்க்கண்டவர்கள் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர்.
1. இஸ்லாமியர்கள்
2. கிருத்துவர்கள்
3. சீக்கியர்கள்
4. புத்தமதத்தினர்
5. பார்சியர்கள்
இவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு பல்வேறு கடன் திட்டங்களை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்துகிறது, இக்கழகம், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்துடன் இணைந்து கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2.

கடன் பெற பொதுவான தகுதிகள் :

1. பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம், நகரத்தில் வசிப்பவராக இருந்தால் ரூ.1,03,000/- ( ரூபாய் இரு இலட்சத்து மூவாயிரம்)க்கு மேற்படாமலும், கிராமப்பகுதியில் வசிப்பவராக இருந்தால், ஆண்டு வருமானம் ரூ81,000/- ( ரூபாய் எண்பத்தோராயிரம்) க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

3.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பம் அருகில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பெற்று தேவையான ஆவணங்களுடன் கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்,

4.

கடன் தொகை

1. உச்ச கடன் அளவு கடன் ரூ10,00,000/- ( பத்து லட்சம்)

2. ரூ,5,00,000/- ( ஐந்து லட்சம்) க்கு மேல் வழங்கப்படும் கடனில், முதல் தவணையாக 50% கடன் வழங்கப்படும்.

3. மீதமுள்ள 50% கடன், முதலில் வழங்கிய கடனின் பயன்பாட்டை பார்வையிட்ட பின்னர் வழங்கப்படும்.

5.

கடன் வழங்கும் பங்கு

S.No Particulars Percentage

1.

தேசிய கழகம்

90%

2.

மாநில கழகம்

5%

3.

பயனாளி

5%

மொத்தம்

100%

6.

காரணம் - நோக்கம்

1. சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி ( வளர்ச்சி)
2. கை வினைஞர் மற்றும் மரபு வழிச் சார்ந்த தொழில்கள் மற்றும் வளர்ச்சி
3. தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள்
4. இலகு ரக போக்குவரத்து வாகனம் வழங்குவது
5. விவசாயம் தொடர்பான தொழில்கள்

7.

கறவை மாட்டுக்கடன்

கறவை மாடுகள் வாங்க ஆவின் நிறுவனம் மூலமாக இக்கடன் வழங்கப்படுகிறது

சாதாரண மாடுகள்

கறவை மாடு ஒரு வாங்குவதற்கு ரூ25,000/-
இரண்டு கறவை மாடுகள வாங்க ரூ50,000/-வரை கடன் வழங்கப்படுகின்றது.
இக்கடன் ஆவின் மூலமாக 6% வட்டியில் வழங்கப்படுகிறது.
இக்கடன் 36 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும்.

கலப்பின மாடுகள்

மாடு ஒன்றுக்கு ரூ35,000/-
இரண்டு மாடுகள் ரூ 70,000/-

7.

கல்வி கடன் / கடன் அளவு

1) சிறுபான்மையினர் , மாணவ மாணவியருக்கு கீழ்க்கண்ட படிப்புகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
2) தொழில் நுட்ப கல்வி
3) குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு

ஆ) தகுதியான கட்டணங்கள்

1. சேர்க்கை கட்டணம்
2. பயிற்றுவிப்பு
3. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்கள்
4. தேர்வுக்கட்டணம்
5. விடுதி மற்றும் உணவு கட்டணம் ( விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்)
வ.எண் படிப்பு கடன் தொகை

1.

குறுக்கிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு ( ஒரு வருடம்)

ரூ.3 இலட்சம்

2.

தொழிற் கல்வி / தொழில் நுட்ப கல்வி மற்றும் வேலை வாய் ப்பு படிப்புகள் ( உச்ச அளவு 5 வருடங்கள்)

வருடத்திற்கு ரூ2. இலட்சம் வீதம் அதிக அளவாக ரூ.10. இலட்சம் வரை

3.

முதுகலை தொழிற்கல்வி / தொழில் நுட்ப கல்வி படிப்புகள் ( கடன் காலம் 3 வருடங்கள்)

வருடத்திற்கு ரூ2. இலட்சம் வீதம் அதிக அளவாக ரூ.6. இலட்சம் வரை

4.

வெளிநாடுகளில் தொழிற்கல்வி , தொழில் நுட்ப கல்வி படிப்புகள் அதிக அளவாக 5 வருடங்கள் வரை

வருடத்திற்கு ரூ.4 இலட்சம் வீதம் அதிக அளவாக ரூ20 இலட்சம் வரை

Next Page .... Continuation