CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

கடன் பெற தகுதிகள் :

1. கீழ்க்கண்ட கல்விக்கு கடன் வழங்கப்படும்

அ) மருத்துவக்கல்வி : எம்.பி.பி.எஸ் /பி.டி.எஸ் / பி.வி.எஸ்.சி முதலியவை

ஆ) மருந்தக கல்வி : - பி.ப்பி.டி / பி.பார்ம் / பிலிடி முதலியன

இ)விவசாயம் மற்றும் கூட்டுறவு - பி.எஸ்.சி(விவசாயம்), பி.இ.(விவசாய பொறியியல்) எம்.எஸ்.சி.,(விவசாயம்) டி.கோப்.,எம்.கோப்.,

ஈ) பொறியியல் - பி.இ.,பி.டெக.,பி.ஆர்க்., எம்.இ.,எம்.டெக்., முதலியவை

உ) அறிவியல் கணிப்பொறி - எம்.சி.ஏ ( பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரி / பெயர் பெற்ற கல்லூரி

ஊ) நிர்வாகம் மற்றும் வங்கியியல் பட்டம் - பி.பி.ஏ.,எம்.பி.ஏ.,எம்.பி.எம்.இ., மற்றும் பி.பி.எம்.

2 அரசுப்பணி, அரசு சார்ந்த நிறுவனம், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், கடன் தொகையை திருப்பி செலுத்தும் சக்தியுடைய பணியாளர்களின் மகன் / மகள் படிப்பிற்கு

3. மனுதாரரும், ஜாமீன் தாரரும் வங்கியில் இணை உறுப்பினராக சேர வேண்டும். ஜாமீன் தாரரும் நிரந்தர சம்பளம் பெறும் பணியாளராக இருக்கவேண்டும். கடன் தாரரும், ஜாமீன் தாரரும் பணி ஓய்வு பெறுவதற்கான காலை குறைந்தது 5 வருடங்கள் இருக்க வேண்டும்.

2.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் அருகில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பெற்று கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்,

3.

கடன் தொகை :

பயிற்சி காலம் முழுமைக்கும் ஆகும் செலவில் 95% அல்லது ரூ50000/- ( ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) இதில் குறைந்த தொகை பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் மலை இன வகுப்பினருக்கு முழுத்தொகை ரூ50000/-மும் வழங்கப்படும்.

4.

காரணம் :

அரசுப்பணி, அரசு சார்ந்த நிறுவனம், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், கடன் தொகையை திருப்பி செலுத்தும் சக்தியுடைய பணியாளர்களின் மகன் / மகள் படிப்பிற்கு

5.

திருப்பி செலுத்தும் காலம் :

மாத சம தவணைகளில் மூன்று வருடம் முதல் 5 வருடம் வரை.

6.

வட்டி விகிதம் :

நாள் நிலுவையின் பேரில் 13%

7.

அபராத வட்டி :

3 சதவீதம்

8.

கடனுக்கான பிணையம் :

கடன் தாரர் , ஜாமீன் தாரர் நிரந்தர சம்பளம் பெறும் பணியாளராக / அரசு / அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது பிரபலமான நிறுவனங்களில் பணி புரிபவராக இருக்க வேண்டும். அதற்கான சம்பள சான்றிதழ்

9.

கடனுக்கான பிணையம் :

கடன் அனுமதிக்கும் அதிகாரம் : வங்கியின் நிர்வாக குழு

10.

தேவையான ஆவணங்கள்:

1)மனுதாரரின் வருமான சான்று

2) பொறுப்பு ஏற்பவரின் சம்பளம் அனுமதிக்கும் அதிகாரியின் ஒப்புதல்

3) மனுதாரரின் இருப்பிடச் சான்று ( Nativity Certificate)

4) மனுதாரரின் வயது சான்று

5) பொறுப்பு ஏற்பவர்களின் இருப்பிட சான்று

6) பொறுப்பு ஏற்பவர்களின் சம்பள சான்று

7) பொறுப்பு ஏற்பவரின் வயது சான்று

8) கடன் கோரும் மாணவ, மாணவியருக்கான கல்விக்குரிய சேர்க்கை சான்று

9) எந்த கல்வி, பிரிவில் சேரப்பட்டுள்ளது என்ற விபரங்களுடன் கல்வி காலமும், கல்வி நிறுவனத்தால் அளிக்கப்பட்ட சான்று

10) உத்தேச கல்வி செலவு, இனவாரியாக கல்வி நிறுவனத்தால் அளிக்கப்பட்ட சான்று

11) கடன் தொகை பட்டுவாடா காலம் குறித்த கல்வி நிலையத்தின் சான்று

12) மாணவரின் அடையாள அட்டை

13) கடன் தொகை ரூ.50000 க்கு மேல் பெறுபவர் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்.

1) அடமானம் செய்ய உள்ள நிலம் / வீடு தொடர்புடைய மூலப்பத்திரம், கிரையப்பத்திரம்/ உரிமைப் பத்திரம் / பட்டா நகல் இதர தொடர்புடைய ஆவணங்கள்

2) 31 வருட வில்லங்க சான்று

3) வங்கி வழக்கறிஞர் சட்டக்கருத்துரை

4) கடைசியாக செலுத்திய தீர்வை ரசீது

5) பொறியாளரின் மதிப்பீடு சான்று