S.No | Points |
---|---|
1. |
முகப்பு கடிதம் |
2. |
மத்தியகாலகடன் விண்ணப்பம்( தனித்தனியாக) |
3. |
மத்திய காலக்கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று |
4. |
தாட்கோ என்றால் சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி கடிதம் |
5. |
இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்தோ பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும் |
6. |
பிற வணிக வங்கிகள் நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும் |
7. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு நகல் நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இனைக்கப்படவேண்டும்/ |
8. |
நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுத்தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும். |
9. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்குன் வருமான சான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கவேண்டும் |
10. |
உறுப்பினர்களுக்கு விண்ணப்பபடிவம் முழுமையாக பூர்த்தி செய்து தனித்தனியாக இணைக்கப்படவேண்டும். ரூ25,000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25000/- க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும். |
11. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும். |
12. |
இதற்கு முன் வழங்கப்பட்ட மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும். |
13. |
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி (விலைப்புள்ளி பட்டியலில் கிளை மேலாளர் மற்றும் விண்ணப்பதாரர் மேலொப்பம் செய்ய வேண்டும். |
14. |
விலைப்பட்டியலில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை விட கூடுதலாக உள்ள தொகையை சொந்த பொறுப்பில் இருசால் செய்ய விண்ணப்பதாரர் ஒப்புக்கொண்டு சம்மத கடிதம் இணைக்கவேண்டும் |
15. |
கடன் தொகையை கொண்டு வாங்கப்படும் சொத்துக்களை கடன் தொகை திருப்பி செலுத்தப்படும் வரை விற்கவோ அல்லது ஈடு செய்யவோ பிறருக்கு மாற்றவோ மாட்டோம் என விண்ணப்பதாரரிடம் உறுதிமொழி பெற்று கடன் மனுவுடன் இணைக்கவேண்டும். |
16. |
கடன் தொகையை கொண்டு உருவாக்கப்படும் சொத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு பாத்தியப்பட்டது என்று எழுதப்பட்ட போர்டு பொருத்த வேண்டும். என விண்ணப்பதாரரிடம் உறுதிமொழி பெறப்பட்டு கடன் மனுவுடன் இணைக்கவேண்டும். |
17. |
விண்ணப்பதாரர் அடமானப் பிணைமுறி செய்து தருவதாக உறுதிமொழி கடிதம் இணைக்கப்படவேண்டும். |
18. |
கடன் தொகையை கொண்டு வாங்கப்படும் சொத்துக்களை விண்ணப்பதாரர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கூட்டு பெயரில் விண்ணப்பதாரர் தன் சொந்த செலவில் காப்பீடு செய்ய சம்மதம் தெரிவித்து கடிதம் இனைக்கவேண்டும். |
19. |
கடன் தொகை பட்டுவாடா செய்த 10 தினங்களுக்குள் கடன் தொகையை பயன்படுத்தியமைக்கான உபயோகிப்பு சான்றிதழ் கிளை மேலாளர் மத்திய வங்கிக்கு சமர்ப்பிப்பதாக சான்று செய்யவேண்டும் |
20. |
விலைப்பட்டியல் கொடுத்த நிறுவனத்திற்கு கொடு உத்திரவு / காசோலை மூலம் வழங்க சம்மதித்து சம்மத கடிதம் விண்ணப்பதாரரிடம் பெற்று கடன் மனுவுடன் இணைக்கவேண்டும். |
21. |
எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி / நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும். |
22. |
கடன் தொகை ரூ1.00 லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையை போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணைகாலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும். |
23. |
கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும் |