S.No | Points |
---|---|
1. |
அடமானம் செய்து கொடுக்கும் வீட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடன் தொகை அளவுக்கு அடமானம் பதிவு செய்து பத்திரம் சமர்ப்பிக்கவேண்டும். |
2. |
அடமானம் பதிவு செய்து கொடுத்த தேதி வரை வில்லங்க சான்று எடுத்து சமர்ப்பிக்கவேண்டும். கடன் தாரர் மற்றும் பிணையதாரர்களிடம் வருமானம் வில்லை ஒட்டி புரோநோட் சமர்ப்பிக்கவேண்டும். |
3. |
வட்டிவிகித அட்டவணையில் உள்ளபடி |
4. |
சட்டக்கருத்து கட்டணம் ரூ. / ம் மத்தியக்கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும். |
5. |
தவணை காலம் |
6. |
அடமானம் கொடுத்துள்ள வீட்டிற்கு கடன் தொகை அளவுக்கு குறையாத மதிப்பிற்கு மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்டு பெயரில் காப்பீடு செய்து பாலிசியை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்கவேண்டும், |
7. |
கடன் தாரர் பெயரில் மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு விபரம் சமர்ப்பிக்கவேண்டும் |
8. |
அடமானம் கொடுத்துள்ள வீட்டிற்குரிய அனைத்து வாரிசுகளையும் கடன் தீரும் வரை உரிய காலக்கெடுவிற்குள் கடன் தாரரே தனது சொந்த பொறுப்பில் செலுத்துவதாக உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும், |
9. |
மத்தியக் கூட்டுறவு வங்கி தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமான சொத்தைப் பார்வையிட சம்மதித்து உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும். |
10. |
அடமான சொத்தை மத்தியக்கூட்டுறவு வங்கிக்கு தெரியாமல் பாராதினம் செய்யமாட்டேன் என்பதற்கு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும். |
11. |
அடமானம் கொடுக்கும் வீட்டிற்கு கடன் தாரர் முறையாக காப்பீடு செய்து காப்பீட்டை புதுப்பிக்காவிடில் மத்தியக் கூட்டுறவு வங்கியில் மேற்படி காப்பீடு தொகையை செலுத்தி கடன் தாரர் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ள சம்மதிக்க வேண்டும். |
12. |
இக்கடனுக்கு சேவைக்கட்டணம் ரூ ம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும். இத்தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பின் அதை சேவைக் கட்டணமாக மாற்றி வரவு வைத்து கொள்ள சம்மதக்கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். |
13. |
கடன் தாரரும் இரு பிணையதாரர்களும் கிளையில் உறுப்பினராக சேர்த்து விபரம் சமர்ப்பிக்கவேண்டும். |
14. |
வீட்டுமனை வாங்க உத்தேசித்துள்ள மனை வில்லங்கமற்ற மனை என உறுதி செய்து கொண்டு கடன் அனுமதிக்கப்படும். இவை வங்கி விவகார எல்லையில் உள்ள ஊராட்சி பேரூராட்சி நகராட்சி ஆகியவற்றில் வீட்டு மனைகளை உரிய அங்கீகாரம் பெற்ற மனைகளாக இருக்கவேண்டும்.வீடு கட்டுமானம், புதுப்பித்தல், விரிவாக்குதல் போன்ற பணிகளுக்கு திட்டப்பணிகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி போன்ற பணிகளுக்கு வரைபடத்திற்கு மாறுதலின்றி கட்டுமானம் செய்ய வேண்டும். |
15. |
வீடு புதுப்பித்தல், பழுது பார்த்தல், விரிவாக்குதல் போன்ற நோக்கங்களுக்கு 2 தவணைகள் 6 மாத காலத்திற்குள் பட்டுவாடா செய்யப்படும். முதலில் பட்டுவாடா அனுமதிக்கப்படும் கடன் தொகையில் 60% வழங்கிய பின்னர் முடிக்கப்பட்ட பணியின் தன்மையின் அடிப்படையில் வங்கியின் மார்க்கெட் மதிப்பாளர் (அதிகாரம் பெற்ற நிர்வாக குழு உறுப்பினர்) சான்றும் பொறியாளர் சான்றும் பெற்ற பின்னர் 40% தொகை வழங்கப்படும். கடன் வழங்கப்பட்ட நோக்கத்தினை உறுப்பினர் பங்கான 15 விழுக்காடு பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும். |
16. |
புதிய வீடு கட்டுவதற்கு தகுதியான அடி மனையை உறுதி செய்து கொண்டு முதலில் 40 விழுக்காடும் மேல்பட்ட கடக்கால் அளவு பணிகள் செய்து பின் பொறியாளர் சான்றும் மற்றூம் கிளை மேலாளர் சான்று பெற்று 30 விழுக்காடும் வழங்கப்படும். கூரை அளவிற்கு பணிகள் பட்டுவாடா முடிந்த பின் பொறியாளர் சான்றும் மற்றும் கிளைமேலாளர் சான்றுபெற்று மீதமுள்ள 30 விழுக்காடும் வழங்கப்படும்.இறுதியில் முழுத்தொகையினை பயன்படுத்தியதற்கான பொறியாளர் சான்று பெற்று புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கடன் களுக்கான தொகை மூன்று தவணைகள் 9 மாதத்திற்கு மிகாமல் வழங்கப்பட்டு வீடு கட்டி முடிக்கப்படவேண்டும். |
17. |
வீடு புதுப்பித்தல், பழுது பார்த்தல், விரிவாக்குதல் புதிய வீடு கட்டுதல் போன்றவைகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை முழுமையாக பயன்படுத்தியது குறித்து வங்கியில் மதிப்பீட்டாளரின் சான்று பெறப்படும். திட்ட மதிப்பீட்டில் உறுப்பினர் பங்கான 15 விழுக்காடு பயன்படுத்தப்பட்டதையும் வங்கி உறுதி செய்யும், |
18. |
கடனுக்கு அடமானம் செய்ய உள்ள சொத்தானது வேறு ஒரு குடும்ப உறுப்பினரின் சொத்தாக இருக்கும் நிலையில் அந்நபரை வங்கியின் இணை உறுப்பினராக சேர்த்து அக்கடனுக்கான கூட்டு கடன் தாரர் (Co borrower) ஆக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்நபரிடம் கடனுக்கு கடன் தொகைக்கு ஈடாக வருவாய் வில்லை pronote பெறப்படவேண்டும். |
19. |
கடனுக்கு ஈடாக காட்டும் சொத்தைப் பொறுத்தவரையில் இதர குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கடன் பெறுவதற்கு ஆட்சேபனை இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் பெற வேண்டும். |
20. |
கடன் பட்டுவாடாவிற்கு முன்பு இவர் கடனுக்கு ஈடாக காட்டப்பட்ட சொத்தின் மூலப்பத்திரம், நகல், கிரைய பத்திரத்தில் அசல் மற்றும் அடமான பத்திரத்தின் அசல் மற்றும் வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றினை சமர்ப்பிக்கவேண்டும். |
21. |
பட்டுவாடா செய்யப்பட்ட கடன் தொகையை முறையாக பயன்படுத்தாத நிலையில் கடன் களை முடிவு கட்டி நிலுவை தொகை முழுவதும் வசூலிக்க வங்கிக்கு அதிகாரம் உண்டு. |
22. |
விதிகளில் என்ன சொல்லியிருந்த போதிலும் வங்கி நலனுக்காக எந்த ஒரு கடனை முடிவு கட்டி வசூலிக்க வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
23. |
கடன் தொகைக்கும் வங்கி பொறியாளர் மதிப்பீடு தொகைக்கும் உள்ள வித்தியாசம் தொகையினை விண்ணப்பதாரர் தன் சொந்த நிதியில் பயன்படுத்துவேன் என சுயசான்று செய்ய வேண்டும். |
S.No | Points |
---|---|
1. |
ஸ்மார்ட் கார்டு மற்றூம் ஆதார் கார்டு |
2. |
விண்ணப்பதாரரின் மேஜரான வாரிசுகளிடமிருந்து கடன் பெற ஆட்சேபணை இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் |
3. |
அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள் உரிமைக்கான ஆவணங்கள் பட்டா நகல் |
4. |
31 வருடங்களுக்கு வில்லங்க சான்று |
5. |
வங்கி வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை |
6. |
அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மற்றும் கட்டிட அனுமதி நகல் |
7. |
கடைசியாக செலுத்திய வீட்டு வரி / தீர்வை ரசீது அசல் ரசீது / மின் கட்டண ரசீது |
8. |
இதர வங்கியில் கடன் இல்லை என்பதற்கான சான்று |
9. |
வங்கியில் நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீட்டு சான்று |
10. |
வருவாய் வட்டாச்சியாரிடம் பெற்ற வருவாய் சான்று பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய் சான்று/ விண்ணப்பதாரரின் வருமானம் தொடர்பான சுயசான்று. |
11. |
கடன் மனுவை கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இணைக்கப்பட வேண்டும் |
12. |
கடன் கோருபவரின் வம்சாவழிச்சான்று |
13. |
வங்கி அதிகாரிகள் பார்வையிடும் வசதிக்கென பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபா ஸ்கெட்ஸ்) |
14. |
கடனுக்கு ஈடாக உள்ள சொத்து விபரத்துடன் கடிதம் |
15. |
சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு |
16. |
கிளை மேலாளரது அறிக்கை சொத்தை ப்பற்றி பரிந்துரை |
17. |
வீட்டு மனை வாங்க கடன் கோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் |
18. |
இந்த காரியத்திற்காக எந்த வித வீட்டு வசதி செய்து தரும் நிறுவனங்களில் கடன்பெறவில்லை என்பதற்கான சான்று |
19. |
கடன் கோருபவர்க்கு வேறு ஏதும் சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்று ( வீ.ஏ.ஓ / தலைவர் / ஊராட்சி மன்றம்) |
20. |
பிணையதாரர்க்குரிய ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல் , வருமான் சான்று இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கான விபரம் பெறப்படவேண்டும் |
21. |
கடனை திருப்பி செலுத்துவது குறித்த உறுதிமொழிகள் |