S.No | Points |
---|---|
1. |
முகப்பு கடிதம் |
2. |
மத்தியகாலகடன் விண்ணப்பம்( தனித்தனியாக) |
3. |
மத்திய காலக்கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று |
4. |
கால்நடைத்துறையின் அனுமதி கடிதம் இல்லையெனில் ரூ20/- முத்திரை தாளில் தமிழக அரசின் மானியம் ஏதும் கோரமாட்டேன் என விண்ணப்பத்தாரர் உறுதி மொழி கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். |
5. |
இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்து பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதி மொழி சான்று செய்ய வேண்டும். |
6. |
பிற வணிக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றூம் கூட்டுறவு நிலவளவங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும். |
7. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். |
8. |
முந்தைய ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுதீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும். |
9. |
வின்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமானசான்று இணைக்கப்படவேண்டும். |
10. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும். |
11. |
இதற்கு முன் வழங்கப்பட்டுள்ள மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என கிளைமேலாளர் சான்று செய்ய வேண்டும் (முதல் கடனாக இருப்பின் இச்சான்று தேவை இல்லை) |
12. |
பயனாளி பங்கு 10% கடன் தொகையுடன் வசூல் செய்து கடன் தொகையுடன் சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என கிளை மேலாளர் சான்று செய்யவேண்டும். |
13. |
கோழிப்பண்ணை அமைக்க போதிய நீர்வசதி மற்றும் மின்வசதி தனது சொந்த செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என விண்ணப்பதாரர் கிளை மேலாளர் சான்று இணைக்கவேண்டும். |
14. |
விண்ணப்பதாரர் பெறப்படும் மானியத் தொகையினை கடன் கணக்கில் வரவு வைக்கும் சம்மதக் கடிதம் இணைக்கப்படவேண்டும் |
15. |
விண்ணப்பதாரர் அமைக்கப்படும் கோழிப்பண்ணைக்கு வின்ணப்பதாரர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கூட்டுப் பெயரில் காப்பீடு செய்வேன் என உறுதிமொழி கடிதம் இனைக்கப்படவேண்டும் |
16. |
போதுமான கால்நடை மருத்துவசதி உள்ளூரில் உள்ளது என கிளை மேலாளர் சான்று செய்யவேண்டும் |
17. |
கடன் தொகையை மூன்று கட்டமாக (30,40,30%) பொறியாளர் திட்ட அறிக்கையின்படி பட்டுவாடா செய்யப்படவேண்டும். மேலும் பொருட்களுக்கான தொகைக்கு ரசீதை பொறியாளர் சான்றுடன் சமர்ப்பிக்கவேண்டும். |
18. |
விண்ணப்பதாரரிடம் மானிய தொகை கிடைக்க பெறவில்லையெனினும் கடன் தொகையை முழுமையாக திரும்ப செலுத்துவேன் என்று உறுதிமொழி கடிதம் பெறப்படவேண்டும். |
19. |
எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்தியக் கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி / நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும். |
20. |
கடன் தொகையை போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணைகாலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும் |
21. |
கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்க வேண்டும். |