S.No | Points |
---|---|
1. |
அடமானம் செய்து கொடுக்கும் வீட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடன் தொகை அளவுக்கு அடமானம் பதிவு செய்து பத்திரம் சமர்ப்பிக்கவேண்டும். |
2. |
அடமானம் பதிவு செய்து கொடுத்த தேதி வரை வில்லங்க சான்று எடுத்து சமர்ப்பிக்கவேண்டும். |
3. |
இக்கடனுக்கு வட்டி அபராத வட்டி 2% |
4. |
தவணை காலம் |
5. |
அடமானம் கொடுத்துள்ள வீட்டிற்கு கடன் தொகை அளவுக்கு குறையாத மதிப்பிற்கு மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்டுப் பெயரில் காப்பீடு செய்து பாலிசியை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்கவேண்டும். |
6. |
கடன் தாரர் பெயரில் மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு விபரம் சமர்ப்பிக்கவேண்டும் |
7. |
அடமானம் கொடுத்துள்ள வீட்டிற்குரிய அனைத்து வாரிசுகளையும் கடன் தீரும் வரை உரிய காலக்கெடுவிற்குள் கடன் தாரரே தனது சொந்த பொறுப்பில் செலுத்துவதாக உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும், |
8. |
மத்தியக் கூட்டுறவு வங்கி தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமான சொத்தைப் பார்வையிட சம்மதித்து உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும். |
9. |
அடமான சொத்தை மத்தியக்கூட்டுறவு வங்கிக்கு தெரியாமல் பாராதினம் செய்யமாட்டேன் என்பதற்கு உறுதிமொழி கடிதம் கொடுக்க வேண்டும். |
10. |
அடமானம் கொடுக்கும் வீட்டிற்கு கடன் தாரர் முறையாக காப்பீடு செய்து காப்பீட்டை புதுப்பிக்காவிடில் மத்தியக் கூட்டுறவு வங்கியில் மேற்படி காப்பீடு தொகையை செலுத்தி கடன் தாரர் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ள சம்மதிக்க வேண்டும். |
11. |
கடன் தாரரும் இரு பிணையதாரர்களும் கிளையில் உறுப்பினராக சேர்த்து விபரம் சமர்ப்பிக்கவேண்டும். |
12. |
கடனுக்கு அடமானம் செய்ய உள்ள சொத்தானது வேறு ஒரு குடும்ப சொத்தாக இருக்கும் நிலையில் அந்நபரை வங்கியின் இணை உறுப்பினராக சேர்த்து அக்கடனுக்குக்கான கூட்டு கடன் தாரர் (Co borrower) ஆக சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அந்நபரிடம் கடனுக்கு கடன் தொகைக்கு ஈடாக வருவாய் வில்லை ஒட்டிய பெறப்படவேண்டும். மேலும் புரோநோட்டில் விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் இருவரிடமும் வருமான வில்லை ஒட்டிய புரோநோட் பெறவேண்டும் |
13. |
பட்டுவாடா செய்யப்பட்ட கடன் தொகையை முறையாக பயன்படுத்தாத நிலையில் கடன் களை முடிவு கட்டி நிலுவை தொகை முழுவதும் வசூலிக்க வங்கிக்கு அதிகாரம் உண்டு. |
14. |
விதிகளில் என்ன சொல்லியிருந்த போதிலும் வங்கி நலனுக்காக எந்த ஒரு கடனை முடிவு கட்டி வசூலிக்க வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
15. |
கடனுக்கு ஈடாக காட்டும் சொத்தை பொறுத்தவரையில் இதர குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கட்ன் பெறுவதற்கு ஆட்சேபனை இல்லை என்பத்ற்கான உறுதிமொழி பத்திரம் பெற வேண்டும். |
16. |
கடன் பட்டுவாடாவிற்கு முன்பு இவர் கடனுக்கு ஈடாக காட்டப்பட்ட சொத்தின் மூலப்பத்திரம் நகல் கிரைய பத்திரத்தில் அசல் மற்றும் அடமானப்பத்திரத்தின் அசல் மற்றும் வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றினை சமர்ப்பிக்க வேண்டும். |
S.No | Points |
---|---|
1. |
அசல் பத்திரங்கள் / மூலப்பத்திரங்கள் உரிமைக்கான ஆவணங்கள், கடன் பத்திரம் |
2. |
குடும்ப அட்டை நகல் / ஆதார் அட்டை நகல் |
3. |
விண்ணப்பதாரரின் மேஜரான வாரிசுகளிடமிருந்து கடன் பெற ஆட்சேபணை இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் |
4. |
31 வருடங்களுக்கு வில்லங்க சான்று |
5. |
வங்கி வழக்கறிஞரிடம் சட்டக்கருத்துரை |
6. |
கடைசியாக செலுத்திய வீட்டு வரி / தீர்வை ரசீது அசல் ரசீது |
7. |
வங்கியில் நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீடு சான்று |
8. |
வருவாய் வட்டாச்சியரிடமிருந்து பெற்ற வருவாய் சான்று மற்றும் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய் / வின்ணப்பதாரரின் வருமானம் தொடர்பான சுயசான்று |
9. |
கடன் மனுவை கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இனைக்கப்படவேண்டும் |
10. |
பிணையதாரர்க்குரிய கீழ்க்கண்ட ஆவணங்கள் பெறப்படவேண்டும் |
11. |
கடன் கோருபவரிடம் வம்சாவழி சான்று |
12. |
வங்கி அதிகாரிகள் பார்வையிடும் வசதிக்கென பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபா ஸ்கெட்ஸ்) |
13. |
சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு |
14. |
கிளை மேலாளரது சொத்தைப் பற்றிய அறிக்கை |
15. |
வீட்டு வாடகை மூலம் ஏதேனும் வருமானம் வருவதாக இருந்தால் அதற்கான சுய சான்று |
16. |
கடனை திருப்பி செலுத்துவது குறித்த உறுதிமொழிகள் ( பினையதாரர் , விண்ணப்பதாரர்) |
17. |
கடன் கோரும் காரியம் தொடர்பான ஆவணங்கள் ரூ.6.00 லட்சத்திற்கு மேல் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும். (ரூ.6.00லட்சத்திற்கு கீழ் கடங்கோரும் போது விண்ணப்பதாரர்கள் சுய சான்று சமர்ப்பிக்கவேண்டும்) |