S.No | Points |
---|---|
1. |
முகப்பு கடிதம் |
2. |
மத்தியகால கடன் விண்ணப்பம் (தனித்தனியாக) |
3. |
மத்தியகாலக் கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று |
4. |
இணை இயக்குநர், தோட்டக்கலைத்துறையின் அனுமதி கடிதம் |
5. |
இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்து பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும். |
6. |
பிற வணிக வங்கிகள் நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும். |
7. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளைமேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். |
8. |
நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டு தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும் |
9. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமானசான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கப்படவேண்டும். |
10. |
உறுப்பினர்களுக்கு விண்ணப்பபடிவம் முழுமையாக பூர்த்தி செய்து தனித்தனியாக இணைக்கப்படவேண்டும். ரூ25,000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25000/- க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும். |
11. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும். |
12. |
இதற்கு முன் வழங்கப்பட்ட மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும். |
13. |
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி (விலைப்புள்ளி பட்டியலில் கிளை மேலாளர் மற்றும் விண்ணப்பதாரர் மேலொப்பம் செய்ய வேண்டும். |
14. |
விலைப்பட்டியலில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை விட கூடுதலாக உள்ள தொகையை சொந்த பொறுப்பில் இருசால் செய்ய விண்ணப்பதாரர் ஒப்புக்கொண்டு சம்மத கடிதம் இணைக்கவேண்டும். |
15. |
விலைப்பட்டியல் கொடுத்த நிறுவனத்திற்கு கொடு உத்திரவு / காசோலை மூலம் வழங்க சம்மதித்து சம்மத கடிதம் விண்ணப்பதாரரிடம் பெற்று கடன் மனுவுடன் இணைக்கவேண்டும் |
16. |
சொட்டுநீர் அமைய உள்ள இடம் / கிணறு அமைய உள்ள இடத்தின் உத்தேச மதிப்பு விலைப்புள்ளி பொறியாளரிடம் பெறப்படவேண்டும் |
17. |
உதவி இயக்குநர் மண்ணியல் துறையினரிடம் கிணறு அமைய உள்ள இடத்திற்கு அனுமதி பெறப்பட்டதற்கான சான்று இணைக்கப்படவேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் போது பஞ்சாயத்து நிர்வாகத் தலைவரிடம்/ உள்ளாட்சி தலைவரிடம் அனுமதிக்கடிதம் பெற்று வைக்கப்படவேண்டும். |
18. |
புதிய கிணறு அமைய உள்ள இடத்தை படம் எடுத்து அதன் சர்வே எண், நில வரைபடம், கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று இணைக்கப்படவேண்டும். |
19. |
பழைய கிணறு ஆழப்படுத்து முன் / சுற்றுச்சுவர் / சிமெண்ட் கால்வாய் கட்டுதல் / நீர்பாசனக் குழாய்கள் அமைக்கும் முன் அந்திலத்தினை படமெடுத்து மனுவுடன் இணைக்கப்படவேண்டும். |
20. |
சொட்டுநீர் பாசன அமைப்பிற்கு விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் 5 வருட உத்திரவாதம் அளிப்பதாக உத்திரவாத கடிதம் பெற்று இணைக்கப்படவேண்டும். |
21. |
சொட்டுநீர் பாசன அமைப்பிற்கு வழங்கப்பட்ட விலைப்புள்ளி பட்டியல் அத்திட்டத்திற்கு உரிய சரியான மதிப்பீட்டில் பெறப்பட்டது என்றுசம்மந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர் சான்று இணைக்கப்படவேண்டும். |
22. |
சொட்டு நீர்பாசனத்திற்கு கடன் கோரும் பட்சத்தில் மண்ணின் தன்மை குறித்த சான்று நீர் பரிசோதனை சான்று இணைக்கப்படவேண்டும். |
23. |
ஆழ்துளை மற்றும் ஆழ்குழாய் கிணற்றுக்கு கடன் கோரும் பட்சத்தில் ஊராட்சி / பேரூராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று சான்று இணைக்கப்படவேண்டும். |
24. |
புதிய கிணறு பழைய கிணறு புதுப்பிக்கும் போது சரக மேற்பார்வையாளர் / களமேலாளர் கிணறு அமைய உள்ள இடத்தை நேரிடையாக சென்று ஆய்வு செய்து அறிக்கை இணைக்கப்படவேண்டும். |
25. |
எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி / நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றூம் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும். |
26. |
கடன் தொகை ரூ1.--லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையை போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும். |
27. |
கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும். |