CSS Website Layout

Smiley face


S.No Points

1.

முகப்பு கடிதம்

2.

மத்தியகாலகடன் விண்ணப்பம்( தனித்தனியாக)

3.

மத்திய காலக்கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று

4.

தாட்கோ என்றால் சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி கடிதம்

5.

இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்தோ பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும்

6.

கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்ட பிறகு கால்நடை கொள்முதல் பணரசீது பெற்று கடன் மனுவில் இணைக்கப்படவேண்டும்.

7.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும்.

8.

நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுத்தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும்.

9.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமானச்சான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கப்படவேண்டும்

10.

உறுப்பினர்களுக்கு விண்ணப்படிவம் முழுமையாக பூர்த்தி செய்து தனிதனியாக இணைக்கப்படவேண்டும். ரூ25000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25000/- க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும்

11.

பயனாளியின் பங்கு 10% வசூல் செய்து கடன் தொகையுடன் சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என கிளைமேலாளர் சான்று செய்ய வேண்டும்.

12.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ20/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும்.சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும்

13.

இதற்கு முன் வழங்கப்பட்டுள்ள மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும். முதல் கடன் எனில் இச்சான்று தேவையில்லை.

14.

கால்நடைத்துறை மருத்துவரின் மாட்டுக்கான விலைப்புள்ளி மற்றும் திட்ட அறிக்கை

15.

வாங்கப்படும் கறவை மாடுகளின் காதுகளில் அடையாள குறி பொறுத்த சம்மதம் தெரிவித்து உறுப்பினர்களிடம் கடிதம் பெற்று இணைக்கவேண்டும்

16.

கூட்டுறவு பால் சங்கத்துடன் ஒப்பந்தம் இல்லையெனில் விண்ணப்பதாரர் ரூ20/- முத்திரை தாளில் உற்பத்தியாகும் பாலை தன் சொந்த பொறுப்பிம் விற்று கடனை தவணை தவறாமல் இருசால் செய்வேன் என விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று.

17.

கடன் முழுவதும் தீரும் முன்னர் கடன் தாரர்கள் கறவை மாடுகளை விற்கவோ அல்லது வேறு மாற்றம் செய்யவோ மாட்டோம் என உறுப்பினரிடம் உறுதி மொழி கடிதம் பெறப்படவேண்டும்

18.

விண்ணப்பதாரர் மானிய தொகை கிடைக்க பெறவில்லை எனினும் கடன் தொகையை முழுமையாக திரும்ப செலுத்துவேன் என்று உறுதிமொழி கடிதம் பெறப்பட்வேண்டும்

19.

ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கிளை மேலாளர் கடன் தாரரிடமுள்ள கறவை மாடுகளை நேரடியாக பரிசீலனை செய்ய விண்ணப்பதாரரின் உறுதிமொழி கடிதம்

20.

முதல் மாடு பெற்ற பயனாளிகள் அசல் மற்றும் வட்டியை தவணை தவறாமல் இருசால் செய்த பிறகு தான் இரண்டாவது மாடு ஆறு மாதத்திற்கு பின் பட்டுவாடா செய்யப்படவேண்டும்.

21.

கறவைமாடுகள் கிளை மேலாளர் , கால்நடை துறை மருத்துவர், சரக மேற்பார்வையாளர்/ களமேலாளர் கூட்டாக கொள்முதல் செய்கிறோம் என்ற உறுதிமொழி இணைக்கப்படவேண்டும்

22.

சினைமாடுகள் வாங்கப்பட மாட்டாது என விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று மனுவுடன் சமர்ப்பிக்கவேண்டும்

23.

வாங்கப்படும் கறவைமாடுகள் கொள்முதல் செய்த நாள் முதல் கடன் தீரும்வரை விண்ணப்பதாரர் மற்றும் மத்திய வங்கி கிளையின் கூட்டு பேரில் காப்பீடு செய்யப்படும் என விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று சமர்ப்பிக்கவேண்டும் (கொள்முதல் செய்யப்படும் அன்றே மாடுகள் காப்பீடு செய்யப்படவேண்டும்)

24.

மேலும் விண்ணப்பதாரர் கால்நடை மருத்துவ வசதி அவர்கள் சொந்த செலவிலும் மற்றும் கால்நடை மருத்துவ வசதி அருகிலே உள்ளது எனவும் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் கால்நடைக்கு தேவையான தீவன வசதி தாமே செய்து கொள்வேன் என்றும் இரண்டு கறவைமாடுகளுக்கு மேல் கடன் வாங்கும் போது போதுமான தீவன வசதி செய்து கொள்ள போதுமான நிலவசதி உள்ளது என விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும்

25.

எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி டி.என்.எஸ்.சி வங்கி/ நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும்.

26.

கடன் தொகை ரூ1.00 லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையை போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணைகாலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும்

27.

மூலப்பத்திரம்

28.

கிரையப்பத்திரம்

29.

பட்டா நகல்

30.

வில்லங்க சான்றிதழ் 31 வருடம்

31.

அடமானம் பெறப்பட உள்ள இடத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு, வீடாக இருப்பின் வங்கி பொறியாளர் மதிப்பு அறிக்கை

32.

சட்டக்கருத்துரை மத்திய வங்கி வழக்கறிஞரால் வழங்கப்படவேண்டும்