S.No | Points |
---|---|
1. |
முகப்பு கடிதம் |
2. |
குழு நிர்வாகிகள் கையொப்பமிட்ட கடன் விண்ணப்பம் |
3. |
கூட்டுப்பொறுப்பு குழு விண்ணப்பம் |
4. |
அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்ட உள் ஒப்பந்தம் |
5. |
குழு வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் |
6. |
படிவம் 2 முதல் 5 வரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவேண்டும் |
7. |
திட்ட நடவடிக்கையின் தன்மைக்கேற்ற உரிய இதர ஆவணங்கள் |
8. |
கடன் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்கள் திட்ட நடவடிக்கையின் தன்மைக்கேற்ப கடன் தீரும் காலம்வரை காப்பீடு செய்யப்படும் என உறுதிமொழி கடிதம் |
9. |
கடன் மூலம் உருவாக்கப்படும் அசையும் / அசையா சொத்துக்களை அசல் பத்திர ஆவணங்களை வங்கி சமர்ப்பிக்க உறுதிமொழி கடிதம் |
10. |
கடன் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் மத்திய வங்கியின் அலுவலர்கள், நபார்டு, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, கூட்டுறவு துறை ஆகிய அலுவலர்கள் ஆய்வு செய்யலாம் என ஊக்குநர் / பிரதிநிதி உறுதிமொழி கடிதம் |
11. |
கடனை முறையாக திருப்பி செலுத்துவோம் என கூட்டுப் பொறுப்புக்குழுவுக்கு உறுப்பினர்கள் கையொப்பம் பெற்றும் அதை ஊக்குநர்/ பிரதிநிதி அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கவேண்டும். |
12. |
கடனை திருப்பி செலுத்த குழு / உறுப்பினர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்று ரூ100/- பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். |
13. |
கடன் பட்டுவாடாவிற்கு பின் கிளை மேலாளர் சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழி கடிதம். |
14. |
குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான தீர்மான நகல் மற்றும் குழுவின் பெயரில் சேமிப்பு கணக்கு துவக்குதல் அதில் வரவு செலவு செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான தீர்மான நகல் |
15. |
கூட்டுப் பொறுப்புக்குழு கடன் கோரும் தீர்மானம். |
16. |
இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்தோ பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்யவேண்டும். |
17. |
பிற வணிக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும். |
18. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு கார்டு நகல்களுடன் உறுப்பினர் / ஜாமீன் தாரர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். |
19. |
நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுத்தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும். |
20. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமான சான்று இணைக்கப்படவேண்டும். |
21. |
உறுப்பினர்களுக்கு விண்ணப்படிவம் முழுமையாக பூர்த்திசெய்து தனித்தனியாக இணைக்கப்படவேண்டும்.ரூ25000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25000/-க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும். |
22. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ரூ.100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும். |
23. |
இதற்கு முன் வழங்கப்பட்டுள்ள மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும் (முதல் கடன் எனில் இச்சான்று தேவை இல்லை) |
24. |
மனுதாரர்களுக்கு ஆடு / கறவை மாடு வளர்ப்பு அனுபவம் மேய்ச்சலுக்கு சொந்த நிலம் அல்லது மேய்ச்சலுக்கு போதுமான இடவசதி உள்ளது என மனுதாரர் மற்றும் கிளை மேலாளர் சான்று இணைக்கப்பட வேண்டும். |
25. |
கறவை மாடுகள் / ஆடுகள் வளர்ப்பதற்கு தொழுவம் ( பாதுகாப்பிற்காக) உள்ளது என மனுதாரர் மற்றும் கிளை மேலாளர் சான்று இணைக்கப்படவேண்டும். |
26. |
கொள்முதல் செய்யப்படும் கறவைமாடுகள் / ஆடுகளுக்கு மனுதாரர் / வங்கி கூட்டுப்பெயரில் காப்பீடு செய்யப்படும் என மனுதாரரின் உறுதிமொழி கடிதம் இணைக்கப்படவேண்டும் |
27. |
போதுமான கால்நடை மருத்துவ வசதி உள்ளூரில் உள்ளது என கிளை மேலாளர் சான்று செய்யவேண்டும், |
28. |
மத்தியக் கால கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று. |
29. |
எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி/ நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும். |
30. |
கடன் தொகை ரூ.5.00 லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையைப் போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும். |
31. |
கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும். |