S.No |
Points |
Details |
1. |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் |
( MSME : MICRO / SMALL / MEDIUM ENTERPRISES)
தனிநபர்கள் சிறு தொழில் உரிமையாளர்கள், உரிமையாளர்/பங்குதாரர்கள் நிறுவனங்கள் கம்பெனிகள் மற்றும் கூட்டுக்குழுக்கள்
|
2. |
கடன் வழங்கும் காரியம் |
தொழிற்கூடம் கட்டுதல்
இயந்திரங்கள் மற்றும் துணைக் கருவிகள் கொள்முதல் செய்தல் ( Plant and Machinery)
கருவிகள் மற்றும் துணைக் கருவிகள் கொள்முதல் செய்ய(Equipment’s and Tools)
தொழில் நுட்ப மேம்பாட்டுக்காக ( Technology Upgradation)
ஆரம்ப மற்றும் தொழிலை இயக்க முன்னதாக ஏற்படும் செலவுகள் ( Preliminary & Pre-Operative Expenses)
ஒரு கற்று இயக்கத்திற்கு தேவையான நடைமுறை மூலதனத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கடன் ( Working Capital Requirements of one operating cycle as a component of integrated loan)
|
3. |
தொழில் பதிவு: |
கடன் கோரும் தனிநபர்/நிறுவனம் மாவட்ட தொழில் மையம், காதி கிராம தொழில் வாரியம் ஆகியவற்றில் தொழில் துவங்குவதற்கான பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.
தொழில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் தேவையான மின் இணைப்பு, பஞ்சாயத்து/நகராட்சி உரிமம் மாவட்ட தொழில் மைய சான்று பெற்றிருக்க வேண்டும்.
கடன் பெறும் நிறுவனம் பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் வருமான வரித்துறையின் மூலமும், கம்பெனிகளாக இருப்பின் 1956ம் வருடத்திய இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழும் பதிவு செய்திருக்க வேண்டும்.
|
4. |
கடன் அளவு |
இக்கடனுக்கான உச்ச அளவு ரூ.20.00 லட்சம் வரை ஆகும்.
|
5. |
வட்டி விகிதம் |
வட்டிவிகித அட்டவணையில் உள்ளபடி
|
6. |
திருப்பி செலுத்தும் காலம் |
இக்கடனின் வாய்தா காலம் 10 வருடம் ஆகும், 12 மாதங்கள் சலுகை காலம் ( Moratorium Period) ( சலுகை காலம் 12 மாதங்கள் நீங்கலாக 108 மாத சமதவணைகளில் செலுத்த வேண்டும்.
|
7. |
ஆதாரம் |
வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் தொகையை போல் 2 மடங்கு மதிப்பிற்கு அசையா சொத்துக்களின் அடமானத்தின் பேரில் வழங்கப்படும்.
கடனின் மூலம் வாங்கும் இயந்திர சாதனங்கள், கருவிகள், உதிரிபாகங்கள், கச்சாப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் முதலியவற்றை ஹைபோதிக்கேசன் பத்திரத்தின் மூலம் வங்கிக்கு ஈடுகட்டவேண்டும். இவைகள் தவிர வங்கி நிர்ணயிக்கும் விகிதத்தில் கூடுதல் ஆதாரம் பெற வங்கிக்கு உரிமை உண்டு.
|
8. |
சொந்த நிதி ( விளிம்பு) |
1. ரூ.10.00 லட்சம் வரை விளிம்பு தொகையாக 10% விண்ணப்பதாரர் கடன் அனுமதிக்கப்பட்ட பின் வங்கியில் செலுத்த வேண்டும்.
2. ரூ.10.00 லட்சத்திற்கு மேல் விளிம்பு தொகையாக 20 % வரை விண்ணப்பதாரர் கடன் அனுமதிக்கப்பட்ட பின் வங்கியில் செலுத்த வேண்டும்.
|
9. |
விலைப்பட்டியல் |
கடனின் மூலம் வாங்கும் இயந்திர சாதனங்கள் யாவும் புதியதாக இருக்க வேண்டும். இதற்கான விலைப்பட்டியலை கடன் கோருபவர் கையொப்பத்துடன் கடன் மனுவுடன் இணைக்க வேண்டும்.(விலைப்புள்ளி பட்டியல் வழங்கும் வணிக நிறுவனமானது ஜிஎஸ்டி GST எண்ணுடன் இருக்கவேண்டும்.
|
10. |
தொழில் நுட்ப குழு |
கடன் விண்ணப்பத்தை கீழ்கண்ட அலுவலர்களை உறுப்பினராக கொண்ட குழு பரிசீலனை செய்து சான்றளிக்கவேண்டும்.
1. உதவி பொதுமேலாளர் கடன் / வங்கி
2. மேலாளர் கடன்
3. கடன் விண்ணப்பம் பரிந்துரை செய்யும் சம்பந்தப்பட்ட கிளைமேலாளர் மற்றும் உதவியாளர்
|
11. |
வங்கி உயர் அலுவலரின் பரிசீலனை |
வங்கி கடனுக்கு ஈடுகாட்டும் சொத்தின் தற்போதைய தன்மையும் தனிநபர் / நிறுவனம் இலாபகரமாம செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், கடனை திருப்பி செலுத்த போதிய வருமானம் உள்ளது குறித்தும் நேரில் சென்று பரிசீலனை செய்து வங்கிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
|
12. |
திட்ட அறிக்கை |
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு நம்பகத்தன்மை மற்றும் தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தக்கூடிய நன்மைகளை ஆராய்ந்து கடன் வழங்கவேண்டும்.
வழங்கப்படும் கடன் களுக்கு தக்க பாதுகாப்பு உள்ளது என்பதை கருத்தில் கொள்வதுடன் வாடிக்கையாளர்கள் வங்கியின் பேரில் வைத்துள்ள நம்பகத்தன்மையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
திட்ட அறிக்கையானது கீழ்காணும் நிலையில் இருக்கவேண்டும்.
நிதிநிலை அறிக்கை
ரொக்க வருகை
கிடைக்கும் நிதி வகை குறித்து பரிசீலிக்க வேண்டும்
திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்டி அதிலிருந்து கடனைதிருப்பி செலுத்தும் வகையில் ஏதுவாக இருக்கவேண்டும்.
|
13. |
கடன் அனுமதி |
இக்கடன் முதலீட்டு கடனாகவோ அல்லது முதலீட்டு கடன் மற்றும் ஒரு கற்று இயக்கத்திற்கு தேவையான நடைமுறை மூலதனம் ஆகிய இரண்டுக்கும் சேர்ந்து ஒருங்கிணைந்த கடனாகவோ ( Integrated Loan) அனுமதிக்கப்படும்
கடன் கோருபவர் தொழிற்கூடம் அமைக்க இயந்திர சாதனங்கள் வாங்க மற்றும் நடைமுறை மூலதனம் ஆகிய மூன்றிற்கும் கடன் கோரியிருந்தால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையினை முறையே தொழிற்கூடம் அமைக்க முதலிலும், இயந்திர சாதனங்கள் வாங்க இரண்டாவதாகவும், நடைமுறை மூலதனத்திற்கு மூன்றாவதாகவும் கடன் கள் பட்டுவாடா செய்ய வேண்டும்.
தொழிற்கூடம் அமைக்க கடன் கோருவோர் அமைக்கப்படும் தொழிற்கூடத்தில் வரைபடத்தை ஊராட்சி / நகராட்சி ஒப்புதலுடன் தொழிற்கூடம் அமைக்க தேவைப்படும் தொகைக்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையையும் கடன் மனுவுடன் இணைக்க வேண்டும். இவ்வகை கடன் மூன்று தவணைகளாக 30:40:30 என்ற சதவீதத்தில் பட்டுவாடா செய்யப்படும். தொழிற்கூடம் அமைக்கும் வேலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை (Progress) கணக்கீடு அடுத்தடுத்த தவணைகளில் பட்டுவாடா செய்யப்படும்.
இயந்திர சாதனத்திற்கு கடன் கோரும் பட்சத்தில் சொந்த நிதி மற்றும் இயந்திர சாதனத்திற்கு அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ஆகிய இரண்டையும் சேர்த்து இயந்திர சாதனங்களை வழங்கும் நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை மூலம் வழங்கப்படும். இத்தொகை வழங்கிய 2 மாத காலத்திற்கு இயந்திரங்களை நிறுவி உற்பத்தினை துவங்க வேண்டும்.
தொழிற்கூடத்தில் கடன் கள் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களுக்கு வங்கி மற்றும் தனிநபர் / நிறுவனம் ஆகியோரின் கூட்டுபெயரில் காப்பீடு செய்யப்பட்டு அசல் பாலிசியை வங்கியின் கிளைகளில் ஒப்படைக்கவேண்டும். மேலும் கடன் தீரும் வரை பாலிசியை புதுப்பிக்கவேண்டும்.
கடன் பெறும் தனிநபர் / நிறுவனம் தனது கணக்குகளை முறைப்படி உடனுக்குடன் பதிவேடுகளில் பதிந்து வரவேண்டும். மேலும் ஆண்டுக்கொருமுறை தணிக்கை செய்யப்பட்ட ஆஸ்தி பொறுப்பு பட்டியலை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தனிநபர் / நிறுவனம் பற்றி மத்திய வங்கிக்கு திருப்தி ஏற்படாவிடில் வழங்கிய கடனை வாய்தாவிற்கு முன்னர் முடிவு கட்டி வசூலிக்கவும், தனிந்பர் / நிறுவனத்தின் சொத்துக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கையகப்படுத்தி கொள்ள வங்கிக்கு உரிமை உண்டு.
இக்கடன் தீரும் வரை வங்கியின் முன் அனுமதி இன்றி நிறுவனத்தை விரிவுபடுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ கூடாது.
கடன் பெறும் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனைக்கான ஏற்பாடுகளை நிறுவனமே மேற்கொள்ள வேண்டும்.
கடன் பெறும் நிறுவனம் கடன் தீரும் வரை கடனுக்கு ஈடுகாட்டப்பட்டுள்ள சொத்துக்களை எவ்வித பராதீனமும், வில்லங்கமும் ஏற்படுத்தக் கூடாது.
|