S.No | Points |
---|---|
1. |
முகப்பு கடிதம் |
2. |
மத்தியகாலகடன் விண்ணப்பம்( தனித்தனியாக) |
3. |
மத்திய காலக்கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று |
4. |
கால்நடைத்துறையின் அனுமதி கடிதம் இல்லையெனில் ரூ20/- முத்திரை தாளில் தமிழக அரசின் மானியம் ஏதும் கோரமாட்டேன் என விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் சமர்ப்பிக்கவேண்டும். |
5. |
இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்து பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும். |
6. |
பிற வணிக வங்கிகள் நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும். |
7. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளைமேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். |
8. |
நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டு தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும். |
9. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் வருமான சான்று இணைக்கப்படவேண்டும். |
10. |
விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும் |
11. |
இதற்கு முன் வழங்கப்பட்ட மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும்.( முதல் கடனாக இருப்பின் சான்று தேவையில்லை) |
12. |
கோழி பண்ணை அமைக்க போதிய நீர்வசதி மற்றும் மின்வசதி தனது சொந்த செலவில் ஏற்படுத்தப்படும் என விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று இணைக்கவேண்டும். |
13. |
விண்ணப்பதாரர் பெறப்படும் மானியத் தொகையினை கடன் கணக்கில் வரவு வைக்கும் சம்மதக்கடிதம் இணைக்கப்படவேண்டும். |
14. |
கால்நடை மருத்துவரின் விலைப்புள்ளி மற்றும் திட்ட அறிக்கை |
15. |
விண்ணப்பதாரர் அமைக்கப்படும் கோழிப்பண்ணைக்கு விண்ணப்பதாரர் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூட்டு பெயரில் காப்பீடு செய்வேன் என உறுதிமொழிக் கடிதம் இணைக்கப்படவேண்டும். |
16. |
போதுமான கால்நடை மருத்துவ வசதி உள்ளூரில் உள்ளது என விண்ணப்பதாரர் மற்றும் கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும், |
17. |
விண்ணப்பதாரர் மானிய தொகை கிடைக்கப்பெறவில்லையெனினும் கடன் தொகையை முழுமையாக செலுத்துவேன் என்று உறுதிமொழி கடிதம் பெறப்படவேண்டும். |
18. |
எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி / டி என் எஸ் சி வங்கி / நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றூம் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும். |
19. |
கடன் தொகையைப் போல் இருமடங்கு சொத்து அடமானம் தவணை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். |
20. |
கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும். |