CSS Website Layout

Smiley face








S.No Points

1.

முகப்பு கடிதம்

2.

மத்தியகாலகடன் விண்ணப்பம்( தனித்தனியாக)

3.

மத்திய காலக்கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று

4.

தாட்கோ என்றால் சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி கடிதம்

5.

இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்தோ பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும்

6.

பிற வணிக வங்கிகள் நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு நிலவள வங்கிகளிடமிருந்து கடன் பாக்கியில்லையென சான்று சமர்ப்பிக்கவேண்டும்

7.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார்டு நகல் நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இனைக்கப்படவேண்டும்/

8.

நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுத்தீர்வை ரசீது விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும்.

9.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்குன் வருமான சான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கவேண்டும்

10.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்கள் ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதிமொழி பத்திரம் இணைக்க வேண்டும். சாட்சிகள் முழு முகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும்

11.

இதற்கு முன் வழங்கப்பட்டுள்ள மத்திய காலக் கடன் கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும்.

12.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி (விலைப்புள்ளி பட்டியலில் கிளை மேலாளர் மற்றும் விண்ணப்பதாரர் மேலொப்பம் செய்யவேண்டும்.

13.

விலைப்பட்டியலில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை விட கூடுதலாக உள்ள தொகையை சொந்த பொறுப்பில் இருசால் செய்ய விண்ணப்பதாரர் ஒப்புக்கொண்டு சம்மத கடிதம் இனைக்க வேண்டும். விலைப்புள்ளி கொடுத்த நிறுவனத்திற்கு தான் காசோலை வழங்கப்படவேண்டும்.

14.

கடன் தொகையை கொண்டு வாங்கப்படும் சொத்துக்களை கடன் தொகை திருப்பிச்செலுத்தப்படும் வரை விற்கவோ அல்லது ஈடு செய்யவோ பிறருக்கு மாற்றவோ மாட்டோம் என விண்ணப்பதாரரிடம் உறுதிமொழி பெற்று கடன் மனுவுடன் இனைக்கவேண்டும்.

15.

கடன் தொகையை கொண்டு உருவாக்கப்படும் சொத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு பாத்தியப்பட்டது என்று எழுதப்பட்ட போர்டு பொருத்தப்படவேண்டும் என வின்ணப்பதாரரிடம் உறுதி மொழி பெறப்பட்டு கடன் மனுவுடன் இனைக்கவேண்டும்.

16.

வாங்கும் வாகனத்தை எந்த நேரத்திலும் கடன் வழங்கும் வங்கியின் உயர் அலுவலர்கள் பார்வையிட சம்மதக் கடிதம் சமர்ப்பிக்கவேண்டும்.

17.

விண்ணப்பதாரர் மத்திய வங்கி மற்றூம் மாநில வங்கி தேசிய வங்கியின் இப்போதுள்ள விதிகளுக்கும் இனி ஏற்படும் விதிகளுக்கும் கட்டுபடுவேன் என்ற உறுதிமொழி கடிதம் இணைக்கப்படவேண்டும்.

18.

வாங்கப்படும் இயந்திரம் மற்றூம் அது தொடர்பான இதர பாகங்களையும் கடன் தாரர் மற்றூம் கடன் வழங்கும் மத்திய வங்கி ஆகியவற்றூடன் கூட்டாக காப்பீடு செய்ய சம்மதம் தெரிவித்து கடிதம் இணைக்கப்படவேண்டும்.

19.

விண்ணப்பதாரர் தொழில்நுட்ப தகுதி பெற்றுள்ளார் என்பதற்கான சான்று இணைக்கப்படவேண்டும்( ஓட்டுநர் உரிமம்)

20.

கடன் தொகை பட்டுவாடா செய்த 10 தினங்களுக்குள் கடன் தொகையை பயன்படுத்தியமைக்கான உபயோகிப்பு சான்றிதழ் கிளை மேலாளர் மத்திய வங்கிக்கு சமர்ப்பிப்பதாக சான்று செய்ய வேண்டும்.

21.

விலைப்பட்டியல் கொடுத்த நிறுவனத்திற்கு கொடு உத்திரவு காசோலை மூலம் வழங்க சம்மதித்து சம்மத கடிதம் விண்ணப்பதாரரிடம் பெற்று கடன் மனுவுடன் இணைக்கவேண்டும்.

22.

விண்ணப்பதாரர் அடமான பிணைமுறி செய்து தருவதாக உறுதிமொழி கடிதம் இணைக்கப்படவேண்டும்

23.

எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்திய கூட்டுறவு வங்கி டிஎன் எஸ் சி வங்கி / நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றூம் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும்.

1)கடன் தொகையை போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவரை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்கவேண்டும்

2) மூலப்பத்திரம்

3) கிரையப்பத்திரம் - குறைந்த பட்சம் 5 ஏக்கர் நிலம் விண்ணப்பதாரர் பெயரில் இருக்கவேண்டும். அதற்குரிய பத்திரம் இணைக்கப்படவேண்டும்.

4) பட்டா நகல்

5) வில்லங்கசான்றிதழ் 31 வருடம் முதாதையர்கள் சொத்து என்றால் 13 ஆண்டுகளுக்கு முந்தைய சிட்டா அடங்கல் வட்டாச்சியரிடம் பெற்று இணைக்கப்படவேண்டும்.

6) சிட்டா அடங்கல், கீ பதிவேடு நகல் மற்றும் வரைபடம்

7) வம்சா வழிப்பட்டியல்

8) அடமானம் பெறப்பட உள்ள இடத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு

9) சட்டக்கருத்துரை ( மத்திய வங்கி வழக்கற்ஞரால் வழங்கப்படவேண்டும்)

24.

கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கடன் தாரர் வழங்கவேண்டும்.