சிறுவணிகர்கள் சிறுவணிகம் மேற்கொள்ளவும் மிக அதிகமாக வட்டி நிர்ணயிக்கும் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கவும் இக்கடன் வழங்கப்படுகிறது.
2.
கடன் வழங்கப்படும் காரியங்கள் :
பூ, பழங்கள், காய்கறிகள், மீன் போன்ற வியாபாரம், துணிவியாபாரம் சிறிய அளவிலான சிற்றுண்டிச் சாலை நடத்துதல் போன்ற வியாபாரம், சிறுபிளாஸ்டிக் வியாபாரக்கடை மற்றும் இது போன்று வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட இதர சிறுவியாபாரங்களுக்கு கடன் வழங்கப்படும்.
3.
கடன் தொகை:
கடன் தாரரின் தேவைக்கேற்ப அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படும்
4.
வட்டி விகிதம்
வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
5.
கடனை திருப்பி செலுத்தும் காலம் :
கடன் தொகை வட்டியுடன் சேர்ந்து 50 வாரங்களுக்குள் செலுத்தி முடிக்கப்படவேண்டும்.
6.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
1. குடும்ப அட்டை நகல் ( விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்)
2. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ( விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்)
3. வென்னிலை கடன் பத்திரம்
4. தொடர் காப்புக்கான கடிதம் ( விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர்)
5. இணை உறுப்பினராக சேர்ந்ததற்கான செல்லான் நகல் ( ஏற்கனவே உறுப்பினராக இருப்பின் உறுப்பினர் எண் குறிப்பிட வேண்டும்)