CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

கடன் பெற தகுதிகள்

1. விண்ணப்பதாரர் மாநில அரசு / மத்திய அரசு / அரசு சார்ந்த நிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிதி உதவி பெறுகின்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரியாற்றும் நிரந்தர பணியாளராக மற்றும் பணி மாறுதல் செய்ய இயலாத பணியிடத்தில் பணிபுரிப்வராக இருக்க வேண்டும்.

2. வங்கியின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3. வங்கியின் இணை உறுப்பினராக சேர வேண்டும்

4. விண்ணப்பதாரர் இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மற்றும் நகர வங்கியில் இதே காரியத்திற்காக கடன் பெற்றிருக்கக்கூடாது.

5. ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

6. மொத்த சம்பளத்தில் கடன் தாரரும், ஜாமீன் தாரருக்கும் 15% க்கு குறையாமல் வீட்டுக்கு கொண்டு செல்லும் சம்பளம் இருக்கவேண்டும்.

7. வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்

8. கடன் தாரரும் மற்றும் ஜாமீன் தாரரும் பணி ஓய்வுகாலம் 4 ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருத்தல் வேண்டும்.

9. CIBIL - சிபில் நிறுவனத்திடமிருந்து கடன் தாரர்களின் நிலைப்பற்றிய நல்லறிக்கை அடிப்படையில் கடன் வழங்க பரிசீலிக்கப்படவேண்டும்.

2.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பம் அருகில் உள்ள மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் பெற்று கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

3.

கடன் தொகை :

பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு அதிகபட்சம் ரூ7,00,000 வரை

அடிப்படை பணியாளர்களுக்கு அதிகபட்சம் ரூ 50,000/-

4.

திருப்பி செலுத்தும் காலம் :

84 சம தவணைகளில் செலுத்த வேண்டும்

5.

வட்டி விகிதம்

வட்டிவிகித அட்டவணையில் உள்ளபடி

6.

அபராத வட்டி

2 சதவீதம்

7.

கடனுக்கான பினையம்

1. கடன் தாரர் மற்றும் ஜாமீன் தாரரால் வழங்கப்படும் வெண்ணிலை கடன் பத்திரம்

2. கடன் தாரர் மற்றும் 2 ஜாமீன் தாரரின் சம்பள சான்றிதழ்

8.

கடன் அனுமதிக்கும் அதிகாரம்

வங்கியின் துணைக்குழு

9.

தேவையான ஆவணங்கள்:

1. விண்ணப்பதாரரின் ஸ்மார்டு கார்டு, பான் கார்டு , ஆதார் கார்டு நகல்

2. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் வங்கியில் இணை உறுப்பினராக சேர்ந்ததற்கான செலான் நகல்

3. விண்ணப்பதாரர் இதர மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளை , பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மற்றும் நகரவங்கியில் இதே காரியத்திற்காக கடன் பெறவில்லை என்ற சான்று

4. இக்கடன் தீரும் வரை இதர நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது இல்லை என்பதற்கான சான்றிதழ்.

5. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரரின் ( உடன் பணியாற்றும் பணியாளர்) சம்பள சான்றிதழ் ( பிடித்த விபரங்களுடன்)

6. ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் உறுப்பினராக இல்லை என்பதற்கான சான்று

7. விண்ணப்பதாரர் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டதற்கான சேமிப்பு கணக்கின் நகல்

8. விண்ணப்பதாரர் பணிபுரியும் இடமானது பணிமாறுதல் செய்யக்கூடிய பணியிடம் இல்லை( No Transferable Post) என்பதற்கான சான்று ( விண்ணப்பதாரால் வழங்கப்பட்டு Pay Disbursing Officer counter sign செய்யப்படவேண்டும்)

9. A letter undertaking by the pay disbursing officer டம் பெறப்படவேண்டும்.