S.No |
Particulars |
1. |
கடன் வழங்கும் காரியங்கள் :
நபார்டு வங்கி ஒப்புதல் பெற்ற இத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலில் கண்ட அனைத்து சிறு தொழில்களுக்கும் கடன் வழங்கலாம். மற்றும் இத்திட்டத்தின் கீழ் பொறியாளர்கள் / மருத்துவர்களுக்கும் தங்கள் தொழில் வகைக்காக ரூ.10.இலட்சம் ( பத்து லட்சம்) கடன் வழங்கலாம். கிராமப்புற கைவினைஞர்கள் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோர் ஆகியவர்களுக்கு இக்கடன் வழங்கப்படும்.
|
2. |
நிபந்தனைகளும் தகுதிகளும்:
1. சிறுதொழில் செய்யும் தனிநபர்கள், தொழில் செய்யும் பங்குதாரர்கள் மற்றும் இதைச் சார்ந்த தொழில் செய்யும் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள்
2. கடன் தாரர், ஜாமீன் தாரர் வங்கியில் இணை உறுப்பினராக சேரவேண்டும்
3. கடன் தொகைக்கு இரு மடங்கு மதிப்புள்ள அசையாச் சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.
|
3. |
கடன் தொகை:
1) தளவாட மூலதனம் நடைமுறை மூலதனத்திற்கு சேர்த்து ரூ50000/- ( ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும்.
2) பொது மறு நிதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கடனாக சிறு தொழில் ஆரம்பிக்க தொழிலின் தன்மைக்கு ஏற்ப ரூ10.00 இலட்சம்
3) ரூ.1.இலட்சம் வரையுள்ள கடன் தொகைக்கு 5% ம், ரூ1 இலட்சத்திற்கு மேல் உள்ள கடன் தொகைக்கு 10%ம் விளிம்ப்புத் தொகையாக வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
|
4. |
தவணைக்காலம் :
உயர்ந்த பட்சம் 10 இலட்சம் வரை கருணைக் காலமாக 12 மாதம் முதல் 18 மாத காலம் வரை அனுமதிக்கப்படும்.
|
5. |
வட்டி விகிதம் :
வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
6. |
சான்று அளித்தல்
கடன் தொகையைக் கொண்டு வாங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கடன் தொகைக்கு ஈடான அசையாச் சொத்து மற்றும் 3 வது நபர் உறுதிமொழி ப் பத்திரம் தரப்படவேண்டும். தொழில் திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் தொழில் நுட்பவல்லுநரால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வாய்ப்பு குறித்து சான்று செய்யப்படவேண்டும்.
|
7. |
கட்டணங்கள் :
1) சட்ட ஆலோசகர் கட்டணம் ரூ250/-
2) தொழிற் கூடம், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கடன் தொகை அளவுக்கு மத்திய வங்கி மற்றும் கடன் தாரரின் கூட்டுப்பெயரில் காப்பீடு செய்யப்படவேண்டும்.
|
8. |
வழங்கும் முறை :
( மூலதனக் கடன்) : யூனிட்டிற்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் விலைப்பட்டியல் கொடுத்த நிறுவனத்திற்கு பட்டுவாடா செய்யப்படும்.
நடைமுறை மூலதனக் கடன் : கடன் தொகை முழுமையாகவோ அல்லது தவணைகளாகவோ காரியத்திற்கேற்ப வழங்கப்படும்.
|
9. |
சிறு தொழில் கடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் ( மத்திய வங்கி மூலம் வழங்கப்படுவது)
1. குடும்ப அட்டை நகல்
2. இருப்பிட சான்று நகல்
3. சிறு தொழில் வழங்குவதற்கு உரிமம் பெற்றதற்கான சான்றிதழ்
4. கடன் பெறுவதற்கு தொழில் குறித்து விபரம்
5. திட்ட அறிக்கை
6. விலைப்புள்ளி ( சிறு வியாபாரத்திற்கு மட்டும்)
7. விண்ணப்பதாரர் : அடமான சொத்து தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்
8. அசல்பத்திரங்கள்,மூலப்பத்திரங்கள், உரிமைக்கான ஆவணங்கள், பட்டா நகல்
9. 31 வருடங்களுக்கு வில்லங்க சான்று
10. வங்கி வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை
11. வழிகாட்டு மதிப்பு விபரங்கள்
12 அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சான்று
13. கடைசியாக செலுத்திய வீட்டு வரி / தீர்வை ரசீது அசல் ரசீது
14. வங்கியில் நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீடு சான்று
15. வருவாய் வட்டாச்சியரிடமிருந்து பெற்ற வருவாய் சான்று / பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய் சான்று வயது சான்று
16. கடன் மனுவில் கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இணைக்கப்படவேண்டும்.
17. கடன் கோருபவரின் வம்சாவழிச் சான்று
18. வங்கி அதிகாரிகள் பார்வையிடும் வசதிக்கென பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபா ஸ்கெட்ஸ்)
19. கடனுக்கு ஈடாக காட்ட உள்ள சொத்து விபரத்துடன் கடிதம்
20. சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு
21. கிளை மேலாளரது அறிக்கை சொத்தைப்பற்றி / ப்ரிந்துரை
22. பிணையத்தாரர்க்குரிய குடும்ப அட்டை நகல் /வருமான சான்று இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கான விபரம் பெறப்படவேண்டும்.
23. கடனை திருப்பி செலுத்துவது குறித்த உறுதிமொழிகள்.
|