8. |
சிறுபான்மையினர் சுய உதவிக்குழுக்கள் : |
அ. சிறுபான்மையினர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து குழுவாகவோ அல்லது தனியாகவோ , சிறு வியாபாரம் அல்லது சிறு தொழில் தொடங்குவதற்கு கடன் பெறலாம்.
ஆ. தனி நபருக்கு கடன் ரூ50000/- (ஐம்பதாயிரம்)
வட்டி - இக்கடனுக்கான வட்டி 6%
தகுதியான தொழில்கள்
காய்கனி கடை , மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள் மற்றும் சிறுவணிகம் போன்றவை.
தகுதியானவர்கள் :
அ) சிறுபான்மையினர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக வேண்டும்.
ஆ) அக்குழு குறைந்தது ஆறு மாதங்களாக சேமிப்பு மற்றும் கடன் வழங்கும் பணிகளை சிறப்பாக செய்திருக்க வேண்டும்.
சிறுபான்மையினர் சுய உதவிக்குழு
சுய உதவிக்குழுவில், சிறு பான்மையினர் 60 விழுக்காடு இருக்க வேண்டும். மீதமுள்ள 40 விழுக்காட்டில் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஊனமுற்றோர் இருக்கலாம்.
சுய உதவிக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை :
அ) சுய உதவிக்குழுவில் அதிக அளவாக 20 உறுப்பினர்களும் குறைந்த அளவாக 10 உறுப்பினர்களும் இருக்கவேண்டும்.
ஆ) ஆண் மற்றும் பெண் ஆகிய 2 சிறு உதவிக்குழுக்களும் கடன் பெறலாம்.
இ) பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
|
14. |
தேவையான ஆவணங்கள் : |
1. சாதிச்சான்றிதழ்
2. பள்ளி மாற்று சான்றிதழ்
3. குடும்ப அட்டை நகல்
4. இருப்பிட சான்று நகல்
5. கடன் பெறுவதற்கு தொழில் குறித்து விபரம்
6. திட்ட அறிக்கை
7. ஓட்டுநர் உரிமம் நகல் ( போக்குவரத்து வாகனக்கடன் பெறுவதாக இருந்தால்)
8. விலைப்புள்ளி ( சிறு வியாபாரத்திற்கு மட்டும்)
9. இதர வங்கியில் கடன் இல்லை என்பதற்கான சான்று
10. கடன் ரூ25000/- வரை கோரும் பட்சத்தில் ஜாமீன் தாரர் அரசு ஊழியராக இருப்பின் சம்பள சான்றிதர், ஜாமீன் தாரர் இதர நபராக இருப்பின் அவருடைய வருமான சான்றிதழ்
11. குடும்பத்தில் வேறு யாரும் கடன் பெறவில்லை என்ற சான்று
12. விண்ணப்பதாரரின் மேஜரான வாரிசுகளிடமிருந்து கடன் பெற ஆட்சேபனைகள் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம்
13. விண்ணப்பதாரர் அடமான சொத்து தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்.
14. அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள், உரிமைக்கான ஆவணங்கள், பட்டா நகல்
15. 31 வருடங்களுக்கு வில்லங்க சான்று
16. வங்கி வழக்கறிஞரிடம் சட்டக்கருத்துரை
17. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி
18. கடைசியாக செலுத்திய வீட்டு வரி / தீர்வை ரசீது அசல் ரசீது
19. வங்கியில் நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீடு சான்று
20. வருவாய் வட்டாச்சியரிடமிருந்து பெற்ற வருவாய் சான்று / பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய் சான்று, வயது சான்று
21. கடன் மனுவில் கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இணைக்கப்படவேண்டும்.
22. கடன் கோருபவரின் வம்சாவழிச்சான்று
23. வங்கி அதிகாரிகள் பார்வையிடும்வசதிக்கென பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபா ஸ்கெட்ஸ்)
24. கடனுக்கு ஈடாக காட்ட உள்ள சொத்து விபரத்துடன் கடிதம்
25. சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு
26. கிளை மேலாளரது அறிக்கை சொத்தைப்பற்றி / பரிந்துரை
27. பிணையத்தாரர்க்குரிய குடும்ப அட்டை நகல் வருமான சான்று, இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கான விபரம் பெறப்படவேண்டும்.
28. கடனை திருப்பி செலுத்துவது குறித்த உறுதிமொழிகள்
|