CSS Website Layout

Smiley face








S.No Particulars

1.

கடன் பெற தகுதிகள் :

கடன் கோருபவர், போக்குவரத்துத் தொழிலில் ஓட்டுநராக பணிபுரிந்தோ அல்லது ஒன்றுக்கு மேற்படாத எண்ணிக்கையிலான போக்குவரத்து வாகனங்களுக்கு சொந்தக்காரர் ஆகவோ அல்லது போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்தோ முழு அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும். தொகுதி உரிமம் பெற்ற வாகன உரிமையாளருக்கு ( Fleet owners)கடன் அளிக்கப்படமாட்டாது. கடன் கோருபவர் வங்கியில் இணை உறுப்பினராக சேர வேண்டும்.

2.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பம் அருகில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பெற்று கிளை மேலாளருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

3.

கடன் தொகை :

வாங்கப்போகும் வாகனத்தின் மொத்த தொகையில் 75% அளவிற்கு மட்டுமே உச்ச அளவாக ரூ10.இலட்சம் வரை கடன் அனுமதிக்கப்படும். மீதி 25% அளவிற்கான தொகையை கடன் கோருபவரே தனது சொந்த நிதியாக ஏற்க வேண்டும். அதை வங்கியில் முன்னதாக செலுத்த வேண்டும்.

4.

காரணம் :

அ) புதிய வாகனங்களுக்கு மட்டுமே கடன் அனுமதிக்கப்படும்.

ஆ) வங்கி கடனின் மூலம் வாங்கும் வாகனத்தையும் சேர்த்து இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு கடன் அனுமதிக்க இயலாது.

5.

திருப்பி செலுத்தும் காலம் :

கடன் பெற்ற தேதியிலிருந்து முதல் 6 மாதங்கள் Moratorium ஆக அனுமதிக்கப்படும்.பின்னர் 48 சம தவணையில் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும்.

6.

வட்டி விகிதம்:

வட்டி விகித அட்டவணையின் உள்ளபடி

7.

அபராத வட்டி :

3 சதவீதம்

8.

கடனுக்கான பிணையம் :

போக்குவரத்து வாகனக்கடன் பெறுவோர் கீழ்கண்ட பத்திரங்களை எழுதிக் கொடுக்க வேண்டும்.

a) Demand Promissory note

b) Continuing Security letter

c) Letter of lien & set off letter of guarantee

9.

தேவையான ஆவணங்கள்:

1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி

2. வங்கி கடனின் மூலம் வாங்கும் வாகனத்தையும் சேர்த்து 2க்கு மேற்பட்ட வாகனங்கள் இல்லை என்பதற்கான சான்று

3. கடனுக்கு ஈடு காட்டும் 2 மடங்கு சொத்துக்குரிய மூல ஆவணங்கள் மற்றும் அதற்கான 31 வருட வில்லங்க சான்றிதழ் (மூல ஆவணங்கள் கடன் தாரர் பெயரில் இல்லை எனில் இதர தொடர்புடைய நபர்களின் சொத்துக்கான மூல ஆவணங்கள்)மற்றும் சார் பதிவாளர் அலுவலக guide line value சான்றிதழ்

4. திட்ட அறிக்கை

5. போக்குவரத்து தொழிலில் ஓட்டுநராக பணிபுரிந்தோ அல்லது போக்குவரத்து வாகனங்களுக்கு சொந்தக் காரராகவோ அல்லது போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்தமைக்கான முன் அனுபவ சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்