CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

பணிபுரியும் மகளிர் கடன் நிபந்தனைகள்

1. பட்டுவாடாவிற்கு முன்பு விண்ணப்பதாரர் மற்றும் 2 பிணையதாரர்களும் மத்திய வங்கி கிளையில் இணை உறுப்பினராக சேர வேண்டும்.

2. கடன் தாரரும், பிணையதாரரும் வங்கி கிளை மேலாளர் முன்னிலையில் கையொப்பமிட்டு ஆவணம் எழுதி தரவேண்டும்.

3. கடன் தாரர் மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். கடன் தொகை அந்த சேமிப்பு கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதின் மூலம் பட்டுவாடா செய்யப்படவேண்டும்,

4.இக்கடனுக்கான் வட்டி 10.5% தவணை கடந்த நிலுவைக்கு 2% கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்,

5. இக்கடன் அடிப்படையில் 36 சமமாத தவணைகளில் வசூலிக்கப்படும்,

6. ரூ100/-க்கான முத்திரை தாளில் கடன் பெறுபவர் மற்றும் ஜாமீன் தாரர்கள் மூவரும் கூட்டாக கடனுக்கு பொறுப்பேற்று எழுதிக் கொடுத்த உறுதிமொழி பத்திரம் கடன் பட்டுவாடாவிற்கு முன்பெற்று தலைமையக சி.என்.ஏ பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

7. அனைத்து பிடித்தங்கள் போக கடன் தாரர் வீட்டிற்கு எடுத்து செல்லும் எஞ்சிய சம்பளம், மொத்த சம்பளத்தில் 25 விழுக்காடு அளவிற்கு குறையாது இருப்பவர்கள் மட்டுமே கடன் பெறத் தகுதியுடையவர்களாவர்

8. கடன் பெறுபவருக்கு பிணைதாரருக்கும் பணி ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு பனிக்காலம் இருக்கவேண்டும்.

9. கடன் அளவு : விண்ணப்பதாரர் பெறும் மொத்த சம்பளத்தில் 20 மடங்கு அல்லது ரூ70,000/- இதில் எது குறைவோ அந்தக் தொகை கடனாக வழங்கப்படும்.

10. இக்கடன் 84 மாத சமதவணைகளில் திருப்பி செலுத்தப்படவேண்டும்.

11. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் கடன் தாரரின் சம்பளத்திலிருந்து கடன் தொகையை ( அசல் வட்டி) பிடித்தம் செய்து ஒவ்வொரு மாதமும் நேரடியாக வங்கிக்கு செலுத்தப்படும் என்று உத்திரவாதம் அளிக்கவேண்டும்.

2.

பணிபுரியும் மகளிர் கடன் - இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1. விண்ணப்பதாரரின் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு அட்டை நகல்

2. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் 1 மற்றும் 2 வங்கியில் இணை உறுப்பினராக சேந்ததற்கான செலான் நகல்

3. வின்ணப்பதாரர் இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மற்றும் நகர வங்கியில் இதே காரியத்திற்காக கடன் பெறவில்லை என்ற சான்று

4. இக்கடன் தீரும் வரை இதர நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது இல்லை என்பதற்கான சான்றிதழ்

5. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் 1 மற்றும் 2 (உடன் பணியாற்றும் பணியாளர்) சம்பள சான்றிதழ் ( பிடித்த விபரங்களுடன்)

6. ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் உறுப்பினராக இல்லை என்பதற்கான் சான்று

7. வின்ணப்பதாரர் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டதற்கான சேமிப்பு கணக்கின் நகல்

8. விண்ணப்பதாரர் பணிபுரியும் இடமானது பணிமாறுதல் செய்யக்கூடிய பணியிடம் இல்லை என்பதற்கான சான்று ( விண்ணப்பதாரரால் வழங்கப்பட்டு ஆல் செய்யப்படவேண்டும்)

9.ரூ 100/- மதிப்புள்ள முத்திரைதாளில் கடன் தாரர், ஜாமீன் தாரர்கள் ஆகிய மூவரும் கூட்டாக எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரம்

10. விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர் ஆகியோரின் பிடித்த விவரங்கள் அடங்கிய சம்பள சான்றிதழ்கள்.

11. விண்ணப்பதாரர் தான் மாறுதலுக்குட்படாத பணியிடத்தில் பணிபுரிவதற்கான சம்பளம் பெற்று வழங்கு அலுவலரால் மேலொப்பமிட்ட தன்னிலை உறுதி மொழி கடிதம்

12. கடன் தாரரும் பிணையதார்களும் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் கடன் உறுதி ஆவணம்.

13. சம்பளம் பெற்று வழங்கு அலுவலர் வழங்கும் உறுதிமொழிக் கடிதம்.