CSS Website Layout

Smiley face








S.No Particulars

IX.

சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர் ( KRISHI SAMPADA)

அ) பயிர்கள்

ராபி மற்றும் காரிப் பருவ பயிர்கள்
பணப்பயிர்கள்
காய்கறி பயிரிடுவோர்
உச்ச கடன் அளவு - ரூ 50,000/- (ஐம்பதாயிரம்)

ஆ) கடன் வழங்கும் பங்கு

S.No Particulars Percentage

1.

தேசிய கழகம்

95%

2.

டாப்செட்கோ நிறுவனம்

5%

மொத்தம்

100%



எ) வட்டி விகிதம் -- 4%

ஈ) திரும்ப செலுத்தும் காலம் -- 4 ஆண்டுகள்

உ) தவணை செலுத்துதல் - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்

X.

டாப்செட்கோ கடன் திட்டம்

அ) நோக்கம் : - கார், வேன், மினிவேன், டிராக்டர்/டிரெய்லர் (விவசாய தொழிலுக்கு) போன்ற வாகனங்களுக்கு கடன் வழங்கலாம். டாப்செட்கோ நிறுவனம் இக்கடனை வழங்குகிறது.

ஆ) உச்ச கடன் அளவு - ரூ.3.13 லட்சம் ( ரூபாய் மூன்று லட்சத்து பதிமூன்றாயிரம்)

இ) வட்டி விகிதம் - 10%

ஈ) திரும்ப செலுத்தும் காலம் - 5 ஆண்டுகள்

உ) தவணை செலுத்துதல் - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்,

XI.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன்

அ) நோக்கம் : நீர் பாசன வசதி செய்வதற்காக மானியத்துடன் இக்கடன் வழங்கப்படுகிறது.

ஆ) தகுதியுடையவர்கள் :
கீழ்க்கண்ட வகுப்பை சேர்ந்தவர்கள்

பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
சீர் மரபினர்
இவ்வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்துவதற்கு கடன் வழங்கப்படுகிறது.

மானியம்: வங்கிக்கடனுக்கு இணையாக , 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. அரசின் மானியம் அதிக அளவாக நபர் ஒன்றுக்கு ரூ5000/- ( ஐம்பதாயிரம்) வழங்கப்படும்.

வட்டி : வங்கி நிர்ணயித்துள்ள வட்டி விகிதம்

தேவைப்படும் ஆவணங்கள்

தேவைப்படும் ஆவணங்கள்

1) வகுப்பு, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்

2) குடும்ப அட்டை

3) முன்னணி நிறுவனத்திலிருந்து விலைப்பட்டியல்

4) திட்ட அறிக்கை ( பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்)

5) ஓட்டுநர் உரிமம் ( வாகன் போக்குவரத்து கடன் பெறுவதாக இருந்தால்) 6) கல்வி கடன் பெறுவதற்கு, கல்லூரி சேர்க்கை ஒதுக்கீடு ஆணை, மாணவர் என்பதற்கான சான்று, செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் அடங்கிய கடிதம்

7) கடன் வழங்கும் வங்கி கேட்கும் இதர ஆவணங்கள்


ஈ) கடன் அனுமதிக்கும் முறை

1. கடன் மனு வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு, திட்ட செயல்பாடு, தனிமை, கடனை திரும்ப செலுத்தும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், படிவம் "அ" வில் பரிந்துரை செய்து, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.

2. இக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில், மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வங்கியால் கடன் அனுமதிக்கப்படும். வங்கிகளின் விதிமுறைகளுக்குட்பட்டு, டாப்செட்கோவின் கடன் உதவி வழங்கப்படும். தவணை தவறிய அசல் மற்றும் வட்டிக்கு டாப்செட்கோ நிர்ணயித்த தவணை தவறிய வட்டி வசூலிக்கப்படும்.


Next Page .... Continuation